ETV Bharat / sports

ஐபிஎல் 2020: டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்! - பஞ்சாப் vs கொல்கத்தாலி ட்ரீம் 11 அணி

பஞ்சாப் - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

Struggling KXIP face KKR in a must-win game

author img

By

Published : Oct 10, 2020, 3:08 PM IST

ஐபிஎல் 13ஆவது சீசனின் லீக் போட்டிகள் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதில் இன்று (அக். 10) நடைபெறும் 24ஆவது லீக் ஆட்டத்தில் கே.எல். ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

அபுதாபியிலுள்ள ஷேக் சயீத் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்த சீசனில் பஞ்சாப் அணி ஐந்து போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துள்ளதால், இன்றைய போட்டியில் கட்டாயம் வெற்றிபெற்றாக வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்: கே.எல். ராகுல் (கேப்டன்), மயங்க் அகர்வல், மந்தீப் சிங், நிக்கோலஸ் பூரான், மேக்ஸ்வெல், சர்ப்ராஸ் கான், முருகன் அஸ்வின், முகமது ஷமி, கிறிஸ் ஜோர்டன், முஜிப் உர் ரஹ்மான், ரவி பிஷ்னோய்.

கேகேஆர்: தினேஷ் கார்த்திக் (கே), ராகுல் திரிபாதி, சுனில் நரைன், சுப்மன் கில், நிதீஷ் ராணா, இயன் மோர்கன், ஆண்ட்ரே ரஸ்ஸல், பாட் கம்மின்ஸ், கம்ளேஷ் நாகர்கோட்டி, வருண் சக்ரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா.

இதையும் படிங்க:ஐபிஎல் 2020: ராஜஸ்தானை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.