ஐபிஎல் தொடரில் இன்று (அக்.17) நடைபெற்ற 33ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதியது. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
பின்னர் அந்த அணியின் உத்தப்பா, ஸ்டீவ் ஸ்மித் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மித் அரைசதம் அடித்து அசத்தினார்.
இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 53 ரன்களையும், உத்தப்பா 41 ரன்களையும் எடுத்தனர்.
பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில், ஆரோன் ஃபிஞ்ச் 14 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
இதைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த கேப்டன் கோலி - தேவ்தத் படிகல் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின்னர் இருவரும் அதிரடி ஆட்டத்தைக் கையிலெடுக்க முற்பட்ட போது படிகல் 35 ரன்களிலும், விராட் கோலி 43 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
பின்னர் வந்த ஏபிடி வில்லியர்ஸ் அதிரடியாக விளையாடி ஆட்டத்தின் போக்கை ஆர்சிபி அணியின் பக்கம் திருப்பினர். இதனால் 19.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டிய ஆர்சிபி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது.
இதையும் படிங்க:வெஸ்ட் இண்டீஸ் அணியிலிருந்து நீக்கப்பட்ட ஷாய் ஹோப்...!