ஐபிஎல் தொடரின் இன்றையை லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதியது. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன் படி களமிறங்கிய பெங்களூருக்கு அணியின் நட்சத்திர வீரர்கள் தேவ்தவ் படிகல், கேப்டன் கோலி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இதைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த பிலீப் - டி வில்லியர்ஸ் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்சித்தது.
இதில் பிலீப் 32 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து டி வில்லியஸும் 24 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் வந்த வாஷிங்டன் சுந்தரும் 21 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்களை மட்டுமே எடுத்தது. ஹைதராபாத் அணி தரப்பில் சந்தீப் சர்மா, ஹோல்டர் தலா இரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையும் படிங்க:நடுவர் பட்டியலில் அலீம் தார் சாதனை!