ETV Bharat / sports

பொறுப்பின்றி மாற்றம் செய்யப்பட்ட ஆர்சிபி அணி: ஹைதராபாத்திற்கு 132 ரன்கள் இலக்கு! - ipl 2020 scorecard

ப்ளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றிபெறுவதற்கு 132 ரன்களை இலக்காக பெங்களூரு அணி நிர்ணயித்துள்ளது.

rcb-sets-a-target-of-132-runs-for-srh
rcb-sets-a-target-of-132-runs-for-srh
author img

By

Published : Nov 6, 2020, 9:15 PM IST

ஹைதராபாத் அணியில் ரஷீத் கான், சந்தீப் ஷர்மா மட்டுமே நல்ல பந்துவீச்சாளர்கள் அல்ல. ஹோல்டர், நதீம், நடராஜன் என அனைவருமே நல்ல பந்துவீச்சாளர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் பெங்களூரு அணியின் பேட்டிங் அமைந்துள்ளது.

ஐபிஎல் தொடரில் ப்ளே ஆஃப் சுற்றுக்கான எலிமினேட்டர் போட்டியில் பெங்களூரு - ஹைதராபாத் அணிகள் ஆடிவருகின்றன. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

டாஸில் வார்னர் - கோலி
டாஸில் வார்னர் - கோலி

ஆர்சிபி அணியில் பிலிப், உடானா, மோரிஸ் ஆகியோர் நீக்கப்பட்டு ஸாம்பா, ஃப்ன்ச், மொயின் அலி ஆகியோர் இடம்பெற்றனர். ப்ளே ஆஃப் தொடரின் முக்கியப் போட்டியிலும் கோலியின் இந்த மாற்றம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதுமட்டுமல்லாமல் லீக் போட்டிகளில் ஒருமுறைகூட தொடக்கம் கொடுக்காத, இந்தப் போட்டியில் படிக்கல் உடன் தொடக்க வீரராக களமிறங்கினார். இதனால் தொடக்கமே பரபரப்பு ஏற்பட்டது. நிச்சயம் பெரிய ஸ்கோர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கோலி, 6 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது நம்பிக்கையிழந்து நடந்த கேப்டன் கோலியின் மனநிலை தான் ஆர்பிசி வீரர்களிடமும் தென்பட்டது.

பின்னர் ஃபின்ச் - படிக்கல் இணை சேர்ந்தது. கோலி தான் போய்விட்டார், ஃபார்மில் இருக்கும் படிக்கல் கரைசேர்ப்பார் என எதிர்பார்த்த நிலையில், 4ஆவது ஓவரிலேயே படிக்கலும் 1 ரன்கள் வெளியேற, ஆர்சிபி அணி 15 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது தவித்தது.

விராட் கோலி விக்கெட்டை வீழ்த்திய ஹோல்டர்

இதையடுத்து ஆர்சிபி ரசிகர்களின் கடைசி நம்பிக்கையான டி வில்லியர்ஸ் - ஃபின்ச் ஜோடி நிதானமாக ரன்கள் சேர்த்தது. 9 ஓவர்கள் பவுண்டரிகள் இன்றி ஹைதராபாத் பந்துவீச்சாளர்களும் கட்டுக்கோப்பாக வீசினார்.

பின்னர் டைம் அவுட் முடிந்து 10ஆவது ஓவரை வீசிய ரஷீத் கான் பந்தில் டி வில்லியர்ஸ் சிக்சர் அடிக்க, டி வில்லியர்ஸின் ஆட்டம் இருக்கிறது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்த ஓவரிலேயே சிறப்பாக ஆடி வந்த ஃபின்ச் 32 ரன்களிலும், தொடர்ந்து வந்த மொயின் அலி ஃபிரீ ஹிட் பந்தில் ரன் அவுட்டும் ஆக, ஆர்சிபியின் நிலை இன்னும் மோசமானது.

அரைசதம் அடித்த டி வில்லியர்ஸ்
அரைசதம் அடித்த டி வில்லியர்ஸ்

சிறிது சிறிதாக கிடைத்த மொமண்ட்டத்தை ஒரே ஓவரில் ஹைதராபாத் அணிக்கு ஆர்சிபி வீரர்கள் தாரைவார்த்தனர். அதன்பின்னர் ஒவ்வொரு ஓவரிலும் டி வில்லியர்ஸ் ஒரு பவுண்டரி அடித்து ரன் ரேட்டை 6 ரன்களுக்கு கொண்டுவந்தார்.

மறுமுனையில் தூபே ரன்கள் பெரிதாகச் சேர்க்கவில்லை என்றாலும், விக்கெட் கொடுத்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் ஆடினார். ஆனால் இவரும் 16ஆவது ஓவரில் ஹோல்டர் வீசிய பந்தில் வார்னரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

சிறப்பாக ஆடிய டி வில்லியர்ஸ் பவுண்டரி அடித்து 39 பந்துகளில் அரைசதம் அடிக்க, 16ஆவது ஓவர் முடிவில் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகளை இழந்து 104 ரன்களை சேர்த்தது. தொடர்ந்து 17அவது ஓவரை வீசிய நடராஜன் பந்தில் சுந்தர் 5, டி வில்லியர்ஸ் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த பேட்ஸ்மேன்களும், பெரிதாக ரன்கள் சேர்க்க முடியாததால், பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் சேர்த்தது.

3 விக்கெட்டுகள் வீழ்த்திய ஹோல்டர்
3 விக்கெட்டுகள் வீழ்த்திய ஹோல்டர்

ஹைதராபாத் அணி தரப்பில் ஜேசன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளையும், நடராஜன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையும் படிங்க: மீண்டும் இப்படியே 80 நாள் பயோ-பபுளில் இருக்கணுமா? விராட் கோலி மிரட்சி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.