ETV Bharat / sports

ஐபிஎல் 2020: டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சு! - RCB vs SRH match updates

பெங்களூரு - ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

RCB one win short of playoffs, SRH need wins & luck

author img

By

Published : Oct 31, 2020, 7:03 PM IST

Updated : Oct 31, 2020, 7:09 PM IST

ஐபிஎல் தொடரின் 52ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதுகிறது.

சார்ஜா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

நடப்பு ஐபிஎல் சீசன் புள்ளிப் பட்டியலில் பெங்களூரு அணி இரண்டாம் இடத்திலும், ஹைதராபாத் அணி ஏழாவது இடத்திலும் உள்ளது. இன்றைய போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெறும் பட்சத்தில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும்.

அதேசமயம் ஹைதராபாத் அணி தோற்கும் பட்சத்தில், அந்த அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழக்கும். இதனால் இன்றைய போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஹைதராபாத்: டேவிட் வார்னர் (கேப்டன்), கேன் வில்லியம்சன், மனீஷ் பாண்டே, சஹா, ஜேசன் ஹோல்டர், அப்துல் சம்த், அபிஷேக் சர்மா, ரஷித் கான், நடராஜன், சபாஷ் நதீம், சந்தீப் சர்மா.

பெங்களூரு: ஜோஷ் பிலீப், விராட் கோலி (கேப்டன்), ஏபிடி வில்லியர்ஸ், தேவ்தத் படிகல், கிறிஸ் மோரிஷ், குகீரத் சிங் மான், இஷுரு உதானா, வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி, முகமது சிராஜ், யுஸ்வேந்திர சஹால்.

இதையும் படிங்க:உடற்தகுதி சோதனைக்கு உட்படுத்தப்படும் ரோஹித்!

Last Updated : Oct 31, 2020, 7:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.