ETV Bharat / sports

பொல்லார்ட் அதிரடியால் கவுரவ ஸ்கோரை எட்டிய மும்பை : ஹைதராபாத்திற்கு 150 ரன்கள் இலக்கு! - ipl scorecard

ஷார்ஜா : ஹைதராபாத் அணிக்கு வெற்றிபெறுவதற்கு மும்பை அணி 150 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

mumbai-scores-149-runs-against-hyderabad-in-first-innings

author img

By

Published : Nov 3, 2020, 9:43 PM IST

ஐபிஎல் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் - மும்பை அணிகள் ஆடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர், பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

தொடர்ந்து காயம் காரணமாக ஓய்வில் இருந்த ரோஹித் ஷர்மா, மீண்டும் இந்தப் போட்டியில் களமிறங்கினார். இதனால் வழக்கம்போல் டி காக்-ரோஹித் கூட்டணி மும்பை அணிக்கு தொடக்கம் கொடுத்தது. களத்திற்கு மீண்டும் திரும்பியுள்ள ரோஹித் ஷர்மா, அதிரடியில் கலக்குவார் என எதிர்பார்த்த நிலையில் நான்கு ரன்களில் வெளியேறினார்.

இதனால் முதல் நான்கு ஓவர்கள் அடக்கி வாசித்த டி காக், சந்தீப் ஷர்மாவின் 4ஆவது ஓவரில் 4,6,6 என அதிரடிக்கு மாறினார். இதன்பின் சுதாரித்த சந்தீப் ஷர்மா, 4ஆவது பந்தில் டி காக்கை 25 ரன்களில் போல்டாக்கினார். பின்னர் சூர்யகுமார் - இஷான் கிஷன் இணை சேர்ந்தது. இந்த இணை நிதானமாக ரன்கள் சேர்க்க, பவர் ப்ளே ஓவர்கள் முடிவில் 48 ரன்களை மும்பை அணி எடுத்தது.

36 ரன்கள் எடுத்த சூர்யகுமார் யாதவ்
36 ரன்கள் எடுத்த சூர்யகுமார் யாதவ்

இதே ஆட்டத்தைத் தொடர்ந்த இந்தக் கூட்டணி, அவ்வப்போது பவுண்டரிகளை விளாசியது. இதனால் 11 ஓவர்கள் முடிவில் 81 ரன்கள் எடுத்திருந்தது. ஆட்டத்தின் கியரை மாற்ற இந்தக் கூட்டணி ஆயத்தமானபோது, நதீம் வீசிய பந்தில் சூர்யகுமார் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு 36 ரன்களில் வெளியேறினார். அவரைத்தொடர்ந்து வந்த குர்ணால் பாண்டியா ரன் ஏதும் எடுக்காமலும், சவுரப் திவாரி 1 ரன்னிலும் ஆட்டமிழக்க, மும்பை அணி 12.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்கள் மட்டுமே எடுத்து திணறத் தொடங்கியது.

2 விக்கெட்டுகளை வீழ்த்திய நதீம்
2 விக்கெட்டுகளை வீழ்த்திய நதீம்

பின்னர் வழக்கம்போல் மும்பை அணியின் முதுகெலும்பாக இருக்கும் பொல்லார்ட் களமிறங்கி அதிரடியாக ஆடினார். இதனால் மும்பை அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. அந்த நேரத்தில் இஷான் கிஷன் 33 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த கவுல்டர்நைல் ஒரு ரன்னில் வெளியேறினார். இதனால் மும்பையின் நிலைமை இன்னும் மோசமானது.

இந்நிலையில், வழக்கமாக இதுபோன்ற சூழல்களில் ஒவ்வொரு முறையும் மும்பை அணியைக் காப்பாற்றும் பொல்லார்ட், மீண்டும் காப்பாற்றினார். நடராஜன் வீசிய 19ஆவது ஓவரில் ஹாட்ரிக் சிக்சர் அடிக்க, அந்த ஓவரில் 20 ரன்கள் சேர்க்கப்பட்டது. பின்னர் கடைசி ஓவரில் ஒரு சிக்சர் அடித்த பின், 2ஆவது பந்தில் பொல்லார்ட் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியாக மும்பை அணி8 விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்களில் 149 ரன்கள் சேர்த்தது.

ரோஹித் விக்கெட்டை வீழ்த்திய ஹைதராபாத்
ரோஹித் விக்கெட்டை வீழ்த்திய ஹைதராபாத்

ஹைதராபாத் அணி சார்பாக சந்தீப் ஷர்மா 3 விக்கெட்டுகளையும், ஹோல்டர், நதீன் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையும் படிங்க: பிஎஸ்எல்லில் இந்தியா, ஐபிஎல்லில் பாக்.! - வாசிம் அக்ரம் கருத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.