ETV Bharat / sports

5ஆவது முறையாக ஐபிஎல் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ்! - ipl 2020 live

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, 5ஆவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

mumbai-indians-won-the-ipl-trophy-for-the-fifth-time

author img

By

Published : Nov 10, 2020, 10:53 PM IST

2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் பரபரப்பான இறுதிப்போட்டியில் மும்பை - டெல்லி அணிகள் ஆடிவருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

பின்னர் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி ஸ்ரேயாஸ் ஐயர் - பண்ட் கூட்டணியின் பொறுப்பான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 156 ரன்களை எடுத்தது. பின்னர் 157 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு, கேப்டன் ரோஹித் - டி காக் இணை தொடக்கம் கொடுத்தனர்.

ரோஹித் ஷர்மா - டி காக்
ரோஹித் ஷர்மா - டி காக்

கடந்தப் போட்டியைப் போலவே இந்தப் போட்டியிலும் அஸ்வின் முதல் ஓவரை வீசினார். ஆனால் கடந்தப் போட்டியை போல் அல்லாமல், அஸ்வின் பந்தில் ரோஹித் சிக்சர் விளாச, ஆட்டம் அமர்க்களமானது. முதல் ஓவர் முதலே அதிரடியாக இந்த கூட்டணி, டெல்லி அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ரபாடா ஓவரில் 4,4,6,4 என்று 18 ரன்கள் எடுத்தனர். இதனையடுத்து ஒவ்வொரு ஓவரிலும் ஒரு சிக்சர் அல்லது ஒரு பவுண்டரி விளாச, மும்பை அணியின் ஸ்கோர் மின்னல் வேகத்தில் எகிறியது.

பின்னர் 5ஆவது ஓவரை வீசிய ஸ்டோனிஸ் பந்தில் டி காக் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். இதற்கு பதிலடியாக சூர்யகுமார் யாதவ் வந்த அடுத்த இரு பந்துகளில் பவுண்டரி, சிக்சர் விளாசினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் மும்பை அணி 61 ரன்களை எடுத்தது.

ரோஹித் தவறால் ரன் அவுட்டான சூர்யகுமார்
ரோஹித் தவறால் ரன் அவுட்டான சூர்யகுமார்

ரோஹித் - சூர்யகுமார் இணை விரைவாக ரன்கள் சேர்க்க மும்பை அணி 10 ஓவர்களில் 88 ரன்களை குவித்தது. 11ஆவது ஓவரில் ரோஹித் ஷர்மாவின் தவறால் சூர்யகுமார் யாதவ் விக்கெட்டை தியாகம் செய்தார். 19 ரன்களில் அவர் வெளியேற, தொடர்ந்து ரோஹித் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை விளாசி அரைசதம் கடந்தார்.

அரைசதம் அடித்த ரோஹித்
அரைசதம் அடித்த ரோஹித்

பின்னர் வந்த இஷான் அதிரடியாக ஆட, கடைசி நான்கு ஓவர்களில் மும்பை அணி வெற்றிபெற 20 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை வந்தது. அந்த நேரத்தில் ரோஹித் ஷர்மா 68 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதன்பின் வந்த பொல்லார்ட் 9 ரன்களில் வெளியேற, கடைசி 17 பந்துகளில் 10 ரன்கள் ரன்கள் தேவைப்பட்டது.

தொடர்ந்து வந்த குர்ணால் - கிஷன் இணை மும்பை அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. 18.4 ஓவர்களில் மும்பை அணி இலக்கை எட்டி, ஐந்தாவது முறையாக ஐபிஎல் சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

இதையும் படிங்க: ’கோலி இல்லைனா என்ன... மேட்ச் பட்டாசா இருக்கும்’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.