ETV Bharat / sports

ஐபிஎல் 2020: 460 ரன்களில் 302 ரன்களை ஓடி எடுத்த விராட் கோலி! - 460 ரன்களில் 302 ரன்களை ஓடி எடுத்த விராட் கோலி

ஹைதராபாத்: நடப்பு ஐபிஎல் சீசனில் 14 போட்டியில் 460 ரன்களை குவித்துள்ள விராட் கோலி, அதில் 302 ரன்களை ஓடி எடுத்து சாதனை படைத்துள்ளார்.

ஐபிஎல் 2020
ஐபிஎல் 2020
author img

By

Published : Nov 5, 2020, 1:35 PM IST

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் ஐ.பி.எல். போட்டி நவம்பா் 10 அன்று நிறைவு பெறுகிறது. துபாய், அபுதாபி, ஷார்ஜாவில் உள்ள மைதானங்களில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது, லீக் சுற்று முடிவடைந்துள்ள நிலையில், மும்பை, டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய அணிகள் முதன் நான்கு இடங்களை பிடித்துள்ளன.

இந்நிலையில், இந்தாண்டு ஐபிஎல் போட்டியில் அதிக ரன்களை எடுத்த வீரர்களின் பட்டியலில் முதல் 15 வீரர்களில் குறைந்த பவுண்டரிகள் அடித்தது விராட் கோலிதான். இதுவரை நடைபெற்ற 14 போட்டிகளில், 460 ரன்களை குவித்துள்ள விராட் கோலி, அதில் 302 ரன்களை ஓடி எடுத்துள்ளார்.

இதனால் அவரின் உடற்தகுதியின் வலிமையை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். இதற்கு அடுத்தபடியாக, ஷிகர் தவன், 233 ரன்களை ஓடி எடுத்துள்ளார்.

லீக் சுற்று முடிவில், அதிக ரன்களை குவித்த வீரர் பட்டியலில் பஞ்சாப் அணியின் கே.எல். ராகும் முதலிடத்தில் உள்ளார். அதே போல், அதிக விக்கெட்டுகள் எடுத்த பட்டியலில் டெல்லி அணியின் ரபாடா முதலிடத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சூப்பர்நோவாஸை வீழ்த்திய வெலாசிட்டி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.