ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டங்கள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்று வரும் 54ஆவது லீக் ஆட்டத்துல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தி வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய தொடக்க வீரர் நிதீஷ் ராணா ரன் ஏதுமின்றி முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த சுப்மன் கில் - திரிபாதி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் 36 ரன்கள் எடுத்திருந்த சுப்மன் கில் ஆட்டமிழந்து வெளியேற, அவரைத் தொடர்ந்து திரிபாதியும் 39 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
இதைத்தொடர்ந்து களமிறங்கிய இயன் மோர்கன் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய மோர்கன் அரைசதம் கடந்து அசத்தினார்.
இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் கேகேஆர் அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக இயன் மோர்கன் 68 ரன்களை எடுத்தார்.
இதையும் படிங்க:வியன்னா ஓபன் டென்னிஸ்: 5 முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார் ரூபெலேவ்!