ஐபிஎல் தொடரில் 13ஆவது சீசன் ஐக்கிய அரபு அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நாளை (அக்.15) நடைபெறும் 31ஆவது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.
இந்நிலையில் தனியார் விளையாட்டு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஆர்சிபி அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் வாஷிங்டன் சுந்தர், அரபு மைதானங்கள் சுழற்பந்துவீச்சுக்கு ஏற்றதல்ல என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வாஷிங்டன் சுந்தர் கூறுகையில், "இதற்கு முன்னதாக நான் சார்ஜா மைதானத்தில் விளையாடும் போது, மைதானத்தில் சிறிது வறட்சியான சூழல் இருந்தது. ஆனால் அதுதவிர இந்த மைதானம் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.
தொடர்ச்சியாக நாங்கள் சரியான இடத்தில் பந்துவீசினால் அது பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்துகிறது. இருப்பினும் ஒரு சில பேட்ஸ்மேன்கள் அப்படி வீசும் பந்துகளையும் பவுண்டரிக்கும் விளாசுகின்றனர். இதனால் ஐக்கிய அரபு அமீரக மைதனாங்கள் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக செயல்படுவதில்லை என தொன்றுகிறது.
-
The Spin Twins in last night’s match: 8️⃣ overs, 3️⃣ wickets, 3️⃣2️⃣ runs.
— Royal Challengers Bangalore (@RCBTweets) October 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
And we thought the lockdown was over.... 😎@yuzi_chahal @Sundarwashi5#PlayBold #IPL2020 #WeAreChallengers #Dream11IPL pic.twitter.com/mBXmG9n1rc
">The Spin Twins in last night’s match: 8️⃣ overs, 3️⃣ wickets, 3️⃣2️⃣ runs.
— Royal Challengers Bangalore (@RCBTweets) October 13, 2020
And we thought the lockdown was over.... 😎@yuzi_chahal @Sundarwashi5#PlayBold #IPL2020 #WeAreChallengers #Dream11IPL pic.twitter.com/mBXmG9n1rcThe Spin Twins in last night’s match: 8️⃣ overs, 3️⃣ wickets, 3️⃣2️⃣ runs.
— Royal Challengers Bangalore (@RCBTweets) October 13, 2020
And we thought the lockdown was over.... 😎@yuzi_chahal @Sundarwashi5#PlayBold #IPL2020 #WeAreChallengers #Dream11IPL pic.twitter.com/mBXmG9n1rc
ஒரு சில போட்டிகளில் எதிரணி 200 ரன்களை எடுத்தாலும், நான் வீசும் நான்கு ஓவர்களில் 12 ரன்களை மட்டுமே கொடுத்துள்ளேன். அதற்கு மைதானம் காரணமல்ல. நான் பந்துவீச தேர்வு செய்த இடங்கள்தான் காரணம்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ஆர்சிபி-க்கு எதிரான போட்டியில் களமிறங்கும் ‘யுனிவர்ஸ் பாஸ்’!