ETV Bharat / sports

வரலாற்றை தக்கவைக்குமா சிஎஸ்கே?

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 37ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

IPL 2020: Struggling CSK, RR face off in must-win game

author img

By

Published : Oct 19, 2020, 4:09 PM IST

தியேட்டர்களில் த்ரில்லர் படம் பார்க்கும் பார்வையாளர்கள், தாங்கள் அமர்ந்திருக்கும் இருக்கையின் நுனிக்கு வருவதைப் போல, ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் அடுத்து என்ன நடக்கும் என ரசிகர்களை ஒரு அதிர்ச்சியிலேயே வைத்திருக்கிறது. அதிலும் நேற்று நடைபெற்ற இரண்டு லீக் போட்டிகளும் ரசிகர்களை, எதிர்பார்ப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்றன என்றால் அது மிகையல்ல.

இதில் கொல்கத்தா அணியுடனான ஆட்டம் கூட சிறிதளவு தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் பஞ்சாப் - மும்பை அணிகள் இடையேயான ஆட்டம், ஐபிஎல் தொடரில் புதிய வரலாற்றைப் பதிவு செய்ததுடன், பார்வையாளர்களின் ‘பிபி’யையும் எகிரவைத்தது.

இந்நிலையில் இனி வரும் லீக் போட்டிகளில் ஓவ்வொரு அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வேகத்தோடு செயல்படும் என்பதால்,போட்டிகள் அனைத்தும் பரபரப்புக்கு பஞ்சமின்றி ரசிகர்களுக்கு விருந்துபடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அந்தவகையில் இன்று (அக்.19) நடைபெறவுள்ள 37ஆவது லீக் போட்டியும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அபுதாபிலுள்ள ஷேக் ஸாயீத் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

நேருக்கு நேர்
நேருக்கு நேர்

இப்போட்டியில் வெற்றி பெறும் அணி மட்டும் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளும் என்பதால், யார் வெற்றி பெறுவார் என்ற கேள்வியுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ்:

ஐபிஎல் தொடர் வரலாற்றில் சிஎஸ்கே அணி பங்கேற்ற அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி, தனக்கென ஒரு தனி சரித்திரத்தை உருவாக்கியுள்ளது. ஆனால் நடப்பு சீசனில் சென்னை அணியின் மோசமான ஆட்டத்தினால், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா? என்ற சந்தேகம் அனைவரது மனதிலும் எழுந்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ்

அதிலும் இனி வரும் அனைத்து லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே, சிஸ்கே அணி பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிப்படுத்தும் என்பதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சாம் கர்ரன், டூ பிளேசிஸ், வாட்சன், ராயூடு, ஜடேஜா எனத் தொடர்ந்து பேட்டிங்கில் அசத்தி வருவதால் இன்றைய போட்டியிலும் வெற்றிக்காக நிச்சயம் போராடுவார்கள்.

ஆனால் கடந்த போட்டியில் டூவைன் பிராவோ காயமடைந்துள்ளதால், இன்றைய ஆட்டத்தில் அவர் களமிறங்குவது சந்தேகம்.

சாம் கர்ரன்
சாம் கர்ரன்

அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர்கள் ஹசில்வுட், இங்கிடி இருவரில் ஒருவருக்கு இன்று வாய்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய ஆட்டத்தி வெற்றி பெற்று சிஎஸ்கே அணி தனது பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிபடுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ராஜஸ்தான் ராயல்ஸ்:

ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் கோப்பையைக் கைப்பற்றிய அணி என்ற பெருமை ராஜஸ்தானுக்கு உண்டு. ஆனால் அதன்பிறகு நடைபெற்ற சீசன்களில் பல முறை பிளே ஆஃப் சுற்றுக்குகூட முன்னேறாமல், லீக் போட்டிகளிலேயே ராஜஸ்தான் அணி நடையைக் கட்டியுள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ்
ராஜஸ்தான் ராயல்ஸ்

இந்நிலையில் நடப்பு சீசனிலும் தொடர் தோல்வியைச் சந்தித்துள்ள ராஜஸ்தான் அணிக்கு, இன்றைய போட்டி மிகச்சவாலானதாக அமையும். ஏனெனில் இரு அணியும் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் விளையாடவுள்ளது.

பட்லர், சாம்சன், ஸ்டோக்ஸ், திவேத்தியா, ரியான் பராக், ஜோஃப்ரா ஆர்ச்சர் என நட்சத்திர வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு உதவுவார்கள் என ரசிகர்ள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

பட்லர் - ஸ்டோக்ஸ்
பட்லர் - ஸ்டோக்ஸ்

நடப்பு ஐபிஎல் சீசனில் இதற்கு முன்னதாக இவ்விரு அணிகளும் மோதிய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

உத்தேச அணி:

சென்னை: ஷேன் வாட்சன், பாப் டூ பிளசிஸ், அம்பத்தி ராயுடு, மகேந்திர சிங் தோனி (கேப்டன்), சாம் கர்ரன், ரவீந்திர ஜடேஜா, தீபக் சஹார், பியூஷ் சாவ்லா, கரன் சர்மா, ஜோஷ் ஹசில்வுட், ஷர்துல் தாக்கூர்.

ராஜஸ்தான்: ஜோஸ் பட்லர், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), சஞ்சு சாம்சன், பென் ஸ்டோக்ஸ், ராபின் உத்தப்பா, ரியான் பராக், ஸ்ரேயாஸ் கோபால், ஜோஃப்ரா ஆர்ச்சர், ராகுல் திவேத்தியா, கார்த்திக் தியாகி, ஜெய்தேவ் உனாத்கட்

இதையும் படிங்க:"இந்த வெற்றி ஐபிஎல் போட்டிகளில் மீண்டு வர உதவும்" - கே.எல்.ராகுல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.