ETV Bharat / sports

ஐபிஎல் 2020: தொடரிலிருந்து விலகினார் மிட்செல் மார்ஷ்! - ஐபிஎல் 2020 தகவல்கள்

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய மிட்செல் மார்ஷ், போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார்.

IPL 2020: SRH's Michell Marsh ruled out, Holder named replacement

author img

By

Published : Sep 23, 2020, 6:02 PM IST

Updated : Sep 25, 2020, 5:59 PM IST

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் கோலகலமாக நடைபெற்று வருகிறது. இந்த சீசன் ஆரம்பித்த சில நாட்களிலேயே ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புக்கு பஞ்சமின்றி தினந்தோறும் ஆட்டம் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.

கடந்த செப்.21ஆம் தேதி நடைபெற்ற 3ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது. இதில் ஆர்சிபி அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் எஸ்.ஆர்.எச். அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது.

இப்போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்காக களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் மிட்செல் மார்ஷ், தனது முதல் ஓவரை வீசும் போது காயமடைந்தார். இதனால் அவர் மைதானத்திலிருந்து உடனடியாக வெளியேறினார்.

இந்நிலையில், மிட்செல் மார்ஷ் காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் அவருக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டரை எஸ்.ஆர்.எச் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

  • 🚨 Official Statement 🚨

    Mitchell Marsh has been ruled out due to injury. We wish him a speedy recovery. Jason Holder will replace him for #Dream11IPL 2020 .#OrangeArmy #KeepRising

    — SunRisers Hyderabad (@SunRisers) September 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இத்தகவலை அந்த அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் உறுதிசெய்துள்ளது. அப்பதிவில், ‘ காயம் காரணமாக மிட்செல் மார்ஷ் தொடரிலிருந்து விலகியுள்ளார். அவர் விரைவில் குணமடைய விரும்புகிறோம். அவருக்குப் பதிலாக ஜேசன் ஹோல்டரை ஒப்பந்தம் செய்துள்ளோம்’ என்று பதிவிட்டுள்ளது.

இதையும் படிங்க:'செட்டில் ஆனால் சிக்கல்தான்' ராஜஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் குறித்து பயிற்சியாளர் கருத்து

Last Updated : Sep 25, 2020, 5:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.