ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன், தொடக்கம் முதலே பரபரப்புடன் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது.
இந்நிலையில், இத்தொடரில் இன்று (செப்.29) நடைபெறவுள்ள 11ஆவது லீக் ஆட்டத்தில், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
எஸ்.ஆர்.எச்: டேவிட் வார்னர் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், கேன் வில்லியம்சன், மனீஷ் பாண்டே, பிரியாம் கார்க், அப்துல் சமத், அபிஷேக் சர்மா, ரஷித் கான், புவனேஷ்வர் குமார், நடராஜன், கலீல் அஹ்மத்.
டெல்லி கேப்பிட்டல்ஸ்: ஷிகர் தவான், பிருத்வி ஷா, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரிஷப் பந்த், ஷிம்ரான் ஹெட்மையர், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆக்சர் படேல், அமித் மிஸ்ரா, அன்ரிச் நோர்ட்ஜே, இஷாந்த் சர்மா, ககிசோ ரபாடா.
இதையும் படிங்க:தோனியின் சாதனையை முறியடித்த அலிஸா ஹீலி!