கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கோலாகலமாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு விருந்துபடைத்து வருகிறது. இதில் இன்று (செப்.28) நடைபெற்ற 10ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதியது.
இதில் முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஆரோன் ஃபிஞ்ச் - தேவ்தத் படிகல் அதிரடியான தொடக்கத்தை தந்தனர்.
இதில் பவுண்டரிகளாக விளாசி வந்த ஆரோன் ஃபிஞ்ச், ஐபிஎல் தொடரில் தனது 15ஆவது அரைசதத்தைப் பதிவு செய்து அசத்தினார். இதைத்தொடர்ந்து 52 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஃபிஞ்ச், பொல்லார்டிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினர். அவரைத் தொடர்ந்து வந்த கேப்படன் விராட் கோலி, இப்போட்டியிலும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
பின்னர் தேவ்தத்துடன் ஜோடி சேர்ந்த ஏபிடி வில்லியர்ஸ், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த தேவ்தத் படிகல், ஐபிஎல் தொடரில் தனது இரண்டாவது அரைசதத்தையும் பதிவு செய்து அசத்தினார்.தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஏபிடி வில்லியர்ஸும் அரைசதம் கடந்தார்.
இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 201 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஏபிடி வில்லியர்ஸ் 55 ரன்களையும் ,தேவ்தத் படிகள் 54 ரன்களையும், ஆரோன் ஃபிஞ்ச் 52 ரன்களையும் எடுத்தனர்.
இதையும் படிங்க:ஐபிஎல் 2020: ராஜஸ்தான் vs பஞ்சாப் - ஆட்டத்தை மாற்றிய தருணங்கள் !