ETV Bharat / sports

ஐபிஎல் 2020: மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்! - மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் நேரலை தகவல்கள்

ஐபிஎல் தொடரில் இன்று (அக்.06) நடைபெறும் 20ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

IPL 2020: Parag, Unadkat under scanner as shaky Royals face rampaging Mumbai

author img

By

Published : Oct 6, 2020, 3:30 PM IST

விறுவிறுப்புடன் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 20ஆவது லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

அபுதாபியிலுள்ள ஷேக் சயீத் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியானது இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளும் ஏறத்தாழ சமபலத்துடன் இருப்பதினால் இன்றைய ஆட்டத்தில் யார் வெற்றிபெறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ்:

ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இந்தச் சீசனில் இதுவரை ஐந்து போட்டிகளில் பங்கேற்று மூன்றில் வெற்றியையும், இரண்டில் தோல்வியையும் சந்தித்துள்ளது.

ரோஹித் சர்மா, குயின்டன் டி காக், இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, குர்னால் பாண்டியா, பொல்லார்ட் என அதிரடியான பேட்டிங்கை கொண்டுள்ள மும்பை அணி, பந்துவீச்சிலும் பும்ரா, போல்ட் என முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களையும் தன்வசம் வைத்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ்
மும்பை இந்தியன்ஸ்

இந்த வீரர்கள் சிறப்பாகச் செயல்படும்பட்சத்தில் இன்றையப் போட்டியில் மும்பை அணியின் வெற்றியானது ஏறத்தாழ உறுதியாகும்.

ராஜஸ்தான் ராயல்ஸ்:

ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதன் இரண்டு போட்டிகளில் வெற்றியைப் பெற்றிருந்தாலும், அடுத்தடுத்தப் போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் நிச்சயம் வெற்றிபெற வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் ராஜஸ்தான் அணி தள்ளப்பட்டுள்ளது.

அதிரடிக்குப் பெயர்போன சஞ்சு சாம்சன், பட்லர், ஸ்மித் ஆகியோர் சிறப்பாகச் செயல்பட்டாலும், நடுவரிசை வீரர்கள் தொடர்ந்து சொதப்புவதால், ராஜஸ்தான் அணி தொடர் தோல்வியைச் சந்தித்துள்ளது.

தற்போது அதற்கேற்றார் போல் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு திரும்பியுள்ளதால், இனி ராஜஸ்தான் அணி மீண்டும் வெற்றிப்பாதைக்குத் திரும்பும் என ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ்
ராஜஸ்தான் ராயல்ஸ்

இருப்பினும் ஸ்டோக்ஸ் தற்போது தனிமைப்படுத்துதல் காலத்தில் உள்ளதால், அவரால் இன்னும் ஒருசில போட்டிகளில் பங்கேற்க இயலாத நிலை உள்ளது. பந்துவீச்சில் ஆர்ச்சர், டாம் கர்ரன் சிறப்பாகச் செயல்பட்டாலும், இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் சோபிக்கத் தவறியதால் இன்றையப் போட்டியில் ராஜஸ்தான் அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேருக்கு நேர்:

மும்பை, ராஜஸ்தான் அணிகள் ஐபிஎல் தொடரில் இதுவரை 20 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் மும்பை இந்தியன்ஸ் அணி 11 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 முறையும் வெற்றிபெற்றுள்ளன. இரு அணிகளும் சமமான வெற்றி விகிதத்தில் இருப்பதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்குப் பஞ்சமிருக்காது.

நேருக்கு நேர்
நேருக்கு நேர்

உத்தேச அணி:

மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா (கே), குயின்டன் டி காக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், கீரன் பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, குர்னால் பாண்டியா, ஜேம்ஸ் பாட்டின்சன், ராகுல் சாஹர், ட்ரெண்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா.

ராஜஸ்தான் ராயல்ஸ்: ஜோஸ் பட்லர், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), சஞ்சு சாம்சன், ராபின் உத்தப்பா, டாம் கர்ரன், ரியான் பராக், ஸ்ரேயாஸ் கோபால், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜெய்தேவ் உனட்கட்/ வருண் ஆரோன், ராகுல் திவேத்தியா, லமோர்.

இதையும் படிங்க:சாதனை நாயகனின் மற்றொரு சாதனை! #விராட்9000

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.