ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்த மூன்று போட்டிகளில் தோல்வியடைந்த சென்னை, பஞ்சாப் அணிகள் இன்று இரவு நடக்க உள்ள ஐபிஎல் லீக் போட்டியில் பலப்பரீட்சை நடத்த உள்ளன. புள்ளிப் பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் மோதுவதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டாலும் வாட்சன், கேதர் ஜாதவ், முரளி விஜய் உள்ளிட்ட வீரர்கள் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர்.
பஞ்சாப் அணியை பொறுத்தவரையில் தொடக்க வீரர்களான மயங்க் அகர்வால், கே.எல் ராகுல் உள்ளிட்ட வீரர்கள் மட்டுமே பேட்டிங்கில் அசத்திவருகின்றனர். பந்துவீச்சை பொறுத்தவரை அந்த அணி தொடர்ந்து சொதப்பி வருகிறது 180 ரன்களுக்கு மேல் எடுத்தாலும் பந்துவீச்சில் சோபிக்க முடியாததால் அந்த அணி தொடர் தோல்விகளை பெற்றுள்ளது. எனவே இன்று நடைபெறும் ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் பஞ்சாப் அணி உள்ளது. இரு அணிகளும் வெற்றிக்கு மல்லுக்கட்டும் என்பதால் இன்றைய போட்டிக்காக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.