கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று (அக்.03) நடைபெற்ற 16ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது.
இப்போட்டியின் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேகேஆர் அணியின் இளம் வீரர் சுப்மன் கில்லின் விக்கெட்டை அமித் மிஸ்ரா வீழ்த்தியிருந்தார். ‘
போட்டி முடிவுக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த டெல்லி அணியின் துணை பயிற்சியாளர் முகமது கைஃப், ‘மிஸ்ரா பல ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். இப்போட்டியில் சுப்மான் கில்லின் விக்கெட் மிகவும் முக்கியமானது. ஏனெனில் கில் கடைசி வரை விளையாட விரும்பும் நபர். மிஸ்ரா, கில்லுக்கு பந்துவீசிய விதம் மிகவும் நன்றாக இருந்தது.
அதேசமயம் கேகேஆர் அணியின் திரிபாதி விளையாடிய விதம் ஆச்சரியமாக இருந்தது. இந்த சீசனில் அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்படாமல் இருந்தது. இன்று அவருக்கு கிடைத்த வாய்பை அவர் சரியாக பயன்படுத்தி, கிட்டத்திட்ட வெற்றியை நெருங்கினார். ஆனால், ஆட்டத்தின் முடிவில் நாங்கள் வெற்றியைப் பெற்றுவிட்டோம்’ என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:பிரஞ்சு ஓபன்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜோகோவிச் வெற்றி!