ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் கலைகட்டத் தொடங்கியுள்ளது. இத்தொடரில் இன்று (அக்.03) நடைபெறவுள்ள 15ஆவது லீக் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.
அபுதாபியிலுள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
இன்றைய போட்டியில் விளையாடும் வீரர்களின் விவரம்:
ஆர்ஆர்: ஜோஸ் பட்லர், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), சஞ்சு சாம்சன், ராபின் உத்தப்பா, டாம் கர்ரன், ரியான் பராக், ஸ்ரேயாஸ் கோபால், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜெய்தேவ் உனட்கட், ராகுல் திவேத்தியா, லமோர்.
ஆர்சிபி: ஆரோன் ஃபிஞ்ச், விராட் கோலி(கேப்டன்), ஏபிடி வில்லியர்ஸ், தேவ்தத் படிகல், ஷிவம் தூபே, வாஷிங்டன் சுந்தர்,குர்கீரத் சிங் மான், இசுரு உதனா, நவ்தீப் சைனி, யுஸ்வேந்திர சஹால், ஆடம் ஸாம்பா.
இதையும் படிங்க:பிரஞ்சு ஓபன்: நான்காம் சுற்றுக்கு முன்னேறிய தீம்!