ஐபிஎல் தொடரில் இன்று (அக்.31) நடைபெறும் 51ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதுகிறது.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி ஏற்கெனவே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதேசமயம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை: பொல்லார்ட் (கேப்டன்), டி காக், சவுரப் திவாரி, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், குர்ணால் பாண்டியா, குல்டர் நைல், ராகுல் சாஹர், ஜெயந்த் யாதவ், போல்ட், பும்ரா.
டெல்லி: ஷிகர் தவான், பிரித்வி ஷா, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ஷிம்ரான் ஹெட்மையர், ரிஷப் பந்த், மார்கஸ் ஸ்டோனிஸ், ஹர்சல் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், நோர்ட்ஜே, பிரவின் தூபே, ககிசோ ரபாடா.
இதையும் படிங்க:கரோனாவை வென்றார் கால்பந்து சாம்பியன் ரொனால்டோ!