ஐபிஎல் தொடரில் இன்று (அக்.25) தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி, முதலில் பேட்டிங் செய்வதாகத் தீர்மானித்தார்.
அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் விராட் கோலி, ஏபிடி வில்லியர்ஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் விராட் தனது 39ஆவது ஐபில் அரை சதத்தை பதிவு செய்து அசத்தினார்.
இதன்மூலம் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து, 145 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 50 ரன்களையும், ஏபிடி வில்லியர்ஸ் 39 ரன்களையும் எடுத்தனர்.
பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணியில் பாப் டூ பிளேஸிஸ் - ருதுராஜ் கெய்க்வாட் இணை சிறப்பான தொடக்கத்தை தந்தளித்தனர். பின் டூ பிளேஸிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இதையடுத்து கெய்க்வாட்டுடன் ஜோடி சேர்ந்த ராயுடு தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ராயுடு 39 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கெய்க்வாட் ஐபிஎல் தொடரில் தனது முதல் அரைசதத்தைப் பதிவு செய்து அசத்தினார்.
இதனால் 18.4 ஓவர்களில் சிஎஸ்கே அணி வெற்றி இலக்கை எட்டி அசத்தியது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பற்றது.
சென்னை அணி தரப்பில் கெய்க்வாட் 65 ரன்களையும், ராயுடு 39 ரன்களையும் எடுத்தனர். இருப்பினும் நடப்பு ஐபிஎல் சீசன் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை சென்னை அணி ஏற்கெனவே இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பன்டஸ்லிகா: பெயர்ன் முனிச் அணி அசத்தல் வெற்றி!