ETV Bharat / sports

ஐபிஎல் 2020: ராஜஸ்தான் - டெல்லி அணிகள் பலப்பரீட்சை! - ஐபிஎல் 2020

ஐபிஎல் தொடரில் இன்று (அக்.09) நடைபெறும் 23ஆவது லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.

IPL 2020: Confident Delhi face struggling Rajasthan

author img

By

Published : Oct 9, 2020, 3:49 PM IST

ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு துளியும் பஞ்சமின்றி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று (அக்.09) நடைபெறும் 23ஆவது லீக் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.

சார்ஜா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி, இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. பட்லர், சாம்சன், ஸ்மித், பிரித்வி ஷா, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் என அதிரடியான வீரர்கள் இன்றைய போட்டியில் விளையாடவுள்ளதால் மைதானத்தில் வான வேடிக்கைகளுக்கு பஞ்சமிருக்காது என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

ஐபிஎல் 2020 புள்ளிப்பட்டியல்
ஐபிஎல் 2020 புள்ளிப்பட்டியல்

ராஜஸ்தான் ராயல்ஸ்:

ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இந்த சீசனில் ஐந்து போட்டிகளில் விளையாடி அதில் முதல் இரண்டு போட்டிகளை மட்டுமே வெற்றி கண்டுள்ளது. பட்லர், ஸ்மித், சாம்சன் என அதிரடி வீரர்கள் இருந்தாலும், அந்த அணி தொடக்க ஓவர்களிலேயே விக்கெட்களை இழந்து தொடர்ச்சியாக மூன்று தோல்விகளை சந்தித்துள்ளது.

மேலும் இன்றைய போட்டி நடைபெறவுள்ள சார்ஜா மைதானத்தில், ராஜஸ்தான் அணி பங்கேற்ற இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளதால், இன்றும் அதன் வெற்றிப் பயணம் தொடரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ்
ராஜஸ்தான் ராயல்ஸ்

அதேசமயம் பந்துவீச்சு தரப்பில் ஆர்ச்சர், கர்ரன், ஸ்ரேயாஸ் கோபால் ஆகியோரைத் தவிர மீதமுள்ள பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து ரன்களை வாரி வழங்குவதால் இன்றைய போட்டியின்போது ராஜஸ்தான் அணியில் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி கேப்பிட்டல்ஸ்:

ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, இந்த சீசனில் ஐந்து போட்டிகளில் விளையாடி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் இந்த சீசன் புள்ளிப்பட்டியலிலும் இரண்டாம் இடத்தில் நீடித்து வருகிறது.

பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், ஸ்டோய்ஸ்னிஸ் என அதிரடி பேட்ஸ்மேன்கள் அணியில் சிறப்பாக செயல்பட்டு வருவதால், இன்றைய போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

டெல்லி கேப்பிட்டல்ஸ்
டெல்லி கேப்பிட்டல்ஸ்

பந்துவீச்சில் ரபாடா, அஸ்வின், நோர்ட்ஜே என அனைவரும் சிறப்பாக செயல்பட்டு வருவதால், இன்றைய போட்டியிலும் அவர்கள் பேட்ஸ்மேன்களுக்கு பெரும் சவாலாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. தொடர் வெற்றியைக் குவித்து வரும் டெல்லி அணி இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நேருக்கு நேர்:

ராஜஸ்தான், டெல்லி அணிகள் ஐபிஎல் தொடரில் இதுவரை 20 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 11 முறையும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 9 முறையும் வெற்றி பெற்றுள்ளது.

நேருக்கு நேர்
நேருக்கு நேர்

உத்தேச அணி:

டெல்லி கேப்பிட்டல்ஸ்: ஷிகர் தவான், பிருத்வி ஷா, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரிஷப் பந்த், ஷிம்ரான் ஹெட்மையர், மார்கஸ் ஸ்டோனிஸ், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல், அன்ரிச் நோர்ட்ஜே, ஹர்சல் பட்டேல், ககிசோ ரபாடா.

ராஜஸ்தான் ராயல்ஸ்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), சஞ்சு சாம்சன், டாம் கர்ரன், ஸ்ரேயாஸ் கோபால், ஜோஃப்ரா ஆர்ச்சர்,ராகுல் திவேத்தியா, லமோர், அங்கித் ராஜ்புட், கார்த்திக் தியாகி.

இதையும் படிங்க: பிஃபா உலகக் கோப்பை : தகுதிச் சுற்று ஆட்டத்தில் அர்ஜென்டினா, உருகுவே வெற்றி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.