ETV Bharat / sports

ஐபிஎல் 2020: ராகுல் அதிரடியில் பெங்களூரை வீழ்த்தியது பஞ்சாப் - RCB vs KXIP result

பஞ்சாப் - பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

IPL 13 - RCB vs KXIP result
IPL 13 - RCB vs KXIP result
author img

By

Published : Oct 15, 2020, 11:24 PM IST

ஐபிஎல் தொடர் 13ஆவது சீசனில் இன்று (அக்.12) நடைபெற்ற 31ஆவது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு விராட் கோலி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார்.

இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 6 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 48 ரன்களை எடுத்திருந்தார்.

இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு மயங்க் அகர்வால் - கேஎல் ராகுல் இணை அதிரடியான தொடக்கத்தை தந்தது. சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

பின்னர் ஜோடி சேர்ந்த கிறிஸ் கெய்ல் - கே.எல்.ராகுல் இணை, எதிரணியின் பந்துவீச்சை பவுண்டரிகளாக மாற்றியது. சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர்.

இதனால் கடைசி ஓவரில் பஞ்சாப் அணி வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி, நடப்பு ஐபிஎல் சீசனில் தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சார்பில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 61 ரன்களையும், கிறிஸ் கெய்ல் 53 ரன்களையும் எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.

இதையும் படிங்க:ஐபிஎல் 2020: டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.