ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தார். அதன்படி களமிறங்கிய மும்பை அணிக்கு டி காக் - ரோஹித் சர்மா இணை அதிரடியான தொடக்கத்தை தந்தது.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த டி காக் 23 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, ரோஹித் சர்மாவும் 35 ரன்களில் பெவிலியன் திரும்பி ஏமாற்றமளித்தார். பின்னர் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் தொடரில் தனது எட்டாவது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். அவருடன் இணைந்த ஹர்திக் பாண்டியாவும் அதிரடியில் மிரட்டி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து 193 ரன்களைக் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 79 ரன்களையும், ரோஹித் சர்மா 35 ரன்களையும் எடுத்தனர்.
இதையும் படிங்க:ஐபிஎல் 2020: ஃபிஞ்சுக்கு வார்னிங் கொடுத்த அஸ்வின்; சிரிப்பை அடக்கமுடியாம் தவித்த பாண்டிங்!