ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் கலைகட்டியுள்ளது. இதில் இன்று (அக். 07) நடைபெற்று வரும் 21ஆவது லீக் ஆட்டதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கேகேஆர் அணியுடன் பலப்பரீட்சை நடத்திவருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி கேப்டன் தினேஷ் கார்த்திக், முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். அதன்படி களமிறங்கிய கேகேஆர் அணிக்கு ராகுல் திரிபாதி - சுப்மன் கில் இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர்.
இதில் 11 ரன்களில் சுப்மன் கில் வெளியேற, அவரை அடுத்து வந்த நிதீஷ் ராணாவும் 9 ரன்களுடன் பெவிலியன் திரும்பி ஏமாற்றமளித்தார். இருப்பினும் மறுமுனையில் அதிரடி ஆட்டத்தைக் கையிலெடுத்த ராகுல் திரிபாதி அரைசதமடித்து அசத்தினார்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ராகுல் திரிபாதி 81 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பிராவோ பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த வீரர்கள் எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் கேகேஆர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ராகுல் திரிபாதி 81 ரன்களைக் குவித்தார். சென்னை அணி டுவைன் பிராவோ மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையும் படிங்க:ஐபிஎல் 2020: பும்ராவை புகழ்ந்த டெண்டுல்கர்!