ஐபிஎல் தொடரில் இன்று (அக்.09) நடைபெற்று வரும் 23ஆவது லீக் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய டெல்லி அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்க வகையில் ஷிகர் தவான் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த பிரித்திவி ஷா, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் ஆகியோரும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
இதைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த ஸ்டோய்னிஸ் - ஹெட்மையர் இணை சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் 39 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹெட்மையரும் 45 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி எட்டு விக்கெட்டுகளை இழந்து, 184 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹெட்மையர் 45 ரன்களையும், மார்கஸ் ஸ்டோய்னிஸ் 39 ரன்களையும் குவித்தனர்.
இதையும் படிங்க:இந்திய வீரருக்கு விமானத்தில் பயணிக்க அனுமதி மறுப்பு!