விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று (அக்.19) நடைபெற்று வரும் 37ஆவது லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் விளையாடிவருகிறது.
இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய சென்னை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் விதத்தில் டூ பிளேசிஸ், வாட்சன், ராயூடு என நட்சத்திர வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
மறுமுனையில் விளையாடிவந்த சாம் கர்ரனும் 23 ரன்களில் விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினார். இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் தோனி - ரவீந்திர ஜடேஜா இணை சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களை குவித்தது. சிஎஸ்கே அணியில் அதிகபட்சமாக தோனி 28 ரன்களையும், ஜடேஜா 36 ரன்களையும் எடுத்தனர்.
இதையும் படிங்க: விராட் கோலியின் சாதனையை முறியடித்த வார்னர்!