ETV Bharat / sports

ஐபிஎல் 2020: சென்னை அணிக்கு 170 ரன்கள் இலக்கு!

சென்னை - பெங்களூரு அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 169 ரன்களை எடுத்தது.

IPL 13 - CSK vs RCB inings break
IPL 13 - CSK vs RCB inings break
author img

By

Published : Oct 10, 2020, 9:18 PM IST

ஐபிஎல் தொடரில் இன்று (அக்.10) தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி, முதலில் பேட்டிங் செய்வதாகத் தீர்மானித்தார்.

அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு ஏமாற்றமளிக்கும் விதத்தில் ஆரோன் ஃபிஞ்ச் சொற்ப ரன்னில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் கோலி - தேவ்தத் படிகல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் படிகல் 33 ரன்களில் வெளியேற அவரைத் தொடர்ந்து வந்த டி வில்லியர்ஸும் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினார்.

மறுமுனையில் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த விராட் கோலி, ஐபிஎல் தொடரில் தனது 38ஆவது அரை சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். இதையடுத்து கோலியுடன் ஜோடி சேர்ந்த ஷிவம் தூபே தனது பங்கிற்கு சில பவுண்டரிகளை விளாசினார். இதன்மூலம் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து, 169 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 90 ரன்களை எடுத்தார்.

இதையும் படிங்க:ஐபிஎல் 2020 : பஞ்சாப்பை வீழ்த்தி கேகேஆர் த்ரில் வெற்றி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.