ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று (அக்.27) நடைபெறவுள்ள 47ஆவது லீக் ஆட்டத்தில், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற இக்கட்டான சூழலில் ஹைதராபாத் அணி உள்ளதால், இன்றைய ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஹைதராபாத்: டேவிட் வார்னர் (கேப்டன்), கேன் வில்லியம்சன், மனீஷ் பாண்டே, விஜய் சங்கர், சஹா, ஜேசன் ஹோல்டர், அப்துல் சம்த், ரஷித் கான், நடராஜன், சபாஷ் நதீம், சந்தீப் சர்மா.
டெல்லி: ஷிகர் தவான், ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ஷிம்ரான் ஹெட்மையர், ரிஷப் பந்த், மார்கஸ் ஸ்டோனிஸ், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல், நோர்ட்ஜே, துஷார் தேஷ்பாண்டே, ககிசோ ரபாடா.
இதையும் படிங்க:ஹைதராபாத்துடன் மல்லுக்கட்டும் டெல்லி - வெல்வது யார்