ETV Bharat / sports

சிஎஸ்கே அணிக்கு சோதனை மேல் சோதனை...! - Bravo will fly back

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் டுவைன் பிராவோ காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளதாக சிஎஸ்கே அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Bravo will fly back, missed Raina and Harbhajan but must respect decisions: CSK CEO

author img

By

Published : Oct 21, 2020, 3:26 PM IST

ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் தொடங்கியதிலிருந்து சிஎஸ்கே அணிக்கு அடிக்குமேல் அடி விழுந்து வருகிறது. அதில் நட்சத்திர ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னா தனிப்பட்ட காரணங்களால் விலகினார். அதைத் தொடர்ந்து ஹர்பஜன் சிங்கும் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக அறிவித்தார்.

இதற்கிடையில் நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி படுதோல்விகளைச் சந்தித்து, பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் இழந்துள்ளது. இப்படி ஒருபுறமிருக்க, தற்போது மேலும் ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகி சிஎஸ்கே ரசிகர்களை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ்

காயத்தால் அவதிப்பட்டு வந்த சிஎஸ்கே அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளதாக அணி நிர்வாகம் இன்று (அக்.21) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாக அலுவலர் காசி விஸ்வநாதன் கூறுகையில், “காலில் ஏற்பட்ட காயம் காரணமாக டுவைன் பிராவோ ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். இன்னும் ஓரிரு நாட்களில் அவர் சொந்த ஊர் திரும்பவுள்ளார்.

டுவைன் பிராவோ
டுவைன் பிராவோ

சிஎஸ்கே அணியில் ஹர்பஜன் சிங், ரெய்னா இருவருமே முக்கியமானவர்கள்தான். ஆனால், அவர்களின் தனிப்பட்ட கோரிக்கைகளையும், முடிவுகளையும் மதிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

பிராவோவுக்கு ஏற்பட்டுள்ள காயம் சிஎஸ்கே அணிக்கு அடுத்த பெரும் பின்னடைவாகும். இதனால் இனி வரும் போட்டிகளில் இம்ரான் தாஹிர், மிட்ஷெல் சான்ட்னர் இருவரில் ஒருவர் அணியில் இடம்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: டெல்லியை பந்தாடியது பஞ்சாப்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.