ETV Bharat / sports

பெண்கள் ஐபிஎல்: கேப்டனின் அதிரடியால் டிரயல் பிளேசர்ஸ் வெற்றி!

author img

By

Published : May 7, 2019, 9:10 AM IST

ஜெய்ப்பூர்: பெண்கள் ஐபிஎல் கிரிக்கெட் முதல் போட்டியில் டிரயல் பிளேசர்ஸ், கேப்டன் ஸ்மிருதி மந்தானாவின் அதிரடி ஆட்டத்தால் சூப்பர்நோவாஸ் அணியை வீழ்த்தியது.

பெண்கள் ஐபிஎல்: கேப்டனின் அதிரடி ஆட்டத்தால் டிரயல் பிளேசர்ஸ் அணி வெற்றி!

பெண்களுக்கான இரண்டாவது ஐபிஎல் தொடர் நேற்று ராஜஸ்தானில் தொடங்கியது. இதில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான சூப்பர்நோவாஸ் அணியும், ஸ்மிருதி மந்தானா தலைமையிலான டிரயல் பிளேசர்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் களம் கண்டன. இதில், டாஸ் வென்ற சூப்பர்நோவாஸ் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் முதலில் பந்துவீச தீர்மானித்தார்.

இதைத்தொடர்ந்து, டிரயல் பிளேசர்ஸ் அணி பேட்டிங் செய்தது. இதில் தொடக்க வீராங்கனைகளாக சுஷி பேட்ஸ்-கேப்டன் ஸ்மிருதி மந்தானா இணை களமிறங்கியது. இதில் சுஷி பேட்ஸ் ஒரு ரன்னில் ஆட்மிழந்து வெளியேறினாலும், கேப்டன் ஸ்மிருதி மந்தானாவுடன் ஹர்லீன் டியோல் ஜோடி சேர்ந்தார். இந்த இணை சூப்பர் நோவாஸ் அணியின் பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொண்டது. இதில் இறுதி ஓவர் வரை களத்தில் ஆடிய கேப்டன் ஸ்மிருதி மந்தானா 67 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து அபராமாக ஆடினார். டிரயல் பிளேசர்ஸ் அணி ஐந்து விக்கெட்கள் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 20 ஓவர்களில் 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சூப்பர்நோவாஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. தொடக்க வீராங்கனைகளாக ப்ரியா புனியா-சமாரி இணை களமிறங்கியது. இதில் ப்ரியா ஒரு ரன்னிலேயே ஆட்டத்திலிருந்து வெளியேற, சமாரி 26 ரன்களில் வெளியேறினார். இதனைத்தொடர்ந்து வந்த ஜெமியா ரோட்ரிக்ஸ்-கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் இணை சிறப்பாக ஆடியது.

ரோட்ரிக்ஸ் 24 ரன்களில் ரன் ஆவுட் ஆகி ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த நடாலி 1 ரன்னில் வெளியேறியதால் ஆட்டம் பரபரப்பானது. இதனையடுத்து, சூப்பர்நோவாஸ் அணி வெற்றிபெற கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டன. கேப்டன் ஹர்மன்ப்ரீத் அதிரடியாக முதல் ஐந்து பந்துகளில் நான்கு பவுண்டரிகள் அடித்து கெத்துக் காட்டினார்.

பின்னர் கடைசி பந்தில் வெற்றிக்கு மூன்று ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கோஸ்வாமியின் அபாரமான பந்தால் தஹுஹு ரன் அவுட் செய்யப்பட்டார். இதனையடுத்து டிரயல் பிளேசர்ஸ் அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Intro:Body:

csk vs mi

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.