ETV Bharat / sports

தோனி குறித்து மனம் திறந்த சிஎஸ்கே பயிற்சியாளர் ஃபிளமிங்...!

பெங்களூரு : இறுதி ஓவர்களில் தோனி எடுக்கும் முடிவுகள் குறித்து எப்போதும் கேள்வி எழுப்ப மாட்டேன் என சென்னை அணியின் பயிற்சியாளர் ஃபிளமிங் தெரிவித்துள்ளார்.

பிளமிங்
author img

By

Published : Apr 22, 2019, 4:53 PM IST

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 39ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின.

இதில், பெங்களூரு அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. அதன் இறுதி மூன்று ஓவர்களின்போது தோனி ஓடி எடுக்கும் ரன்களை எடுக்காமல் சிக்சர்கள் அடிப்பதிலேயே குறியாக இருந்தார்.

இது குறித்து சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஃபிளமிங் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், 'இறுதி ஓவர்களில் தோனி எடுக்கும் முடிவுகள் குறித்து எப்போதும் கேள்வி எழுப்ப மாட்டேன். ஏனென்றால், தோனியைப் போன்று ஆட்டத்தைக் கணக்கிட்டு விளையாடும் வீரர் யாரும் இல்லை.

கடைசிப் பந்தை உமேஷ் யாதவ் சிறப்பாக வீசினார். அதேபோல் பார்திவ் சிறந்த ஃபீல்டிங்கை வெளிப்படுத்தினார். தொடக்கத்தில் ஆடிய வீரர்கள் ரன்கள் எடுக்கத் தவறினர். வீரர்களிடையே பார்ட்னர்ஷிப்கள் சரியாக அமையாததால்தான் தோல்வியடைந்தோம்' எனத் தெரிவித்தார்.

சென்னை அணி பயிற்சியாளர் ஃபிளமிங்கின் கருத்து தோனியின் செயல்பாடுகளுக்கு வலுசேர்க்கும் விதத்தில் அமைந்துள்ளதாக கிரிக்கெட் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.