ஐபிஎல் தொடரின் 12ஆவது சீசன் இன்று சென்னையில் இன்று தொடங்கியது. இதில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் லேஞசர்ஸ் அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. இதில், டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தல தோனி முதலில் பந்துவீச தீர்மானித்தார். இந்தப் போட்டியின் மூலம் பெங்களூரு வீரர் ஷிவம் துபே, ஷிம்ரான் ஹெட்மயர் ஆகியோர் ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகமாகினர்.
இந்தப் போட்டியில் சென்னை அணி முதன்முறையாக மூன்று வெளிநாட்டு வீரர்களுடன் களமிறங்கியுள்ளது, ரசிகர்களையும் கிரிக்கெட் வல்லுனர்களையும் வியப்படைய செய்துள்ளது. இதுகுறித்து, தோனி எந்த விளக்கமும் டாஸின் போது தரவில்லை.
அதுமட்டுமின்றி, சென்னை அணியில், தீபக் சஹார், ஷர்துல் தாக்குர், பிராவோ, வாட்சன், ஹர்பஜன் சிங், ஜடேஜா, இம்ரான் தாஹிர், கேதர் ஜாதவ் (பகுதி நேர பந்துவீச்சாளர்) என எட்டு பந்துவீச்சாளர் உள்ளனர். இதற்கிடையில், விராட் கோலி, டிவில்லியர்ஸ், ஹெட்மயர், மொயின் அலி போன்ற பேட்ஸ்மேன்கள் பட்டாளே கொண்ட பெங்களூரு அணியின் ரன்களைக் கட்டுப்படுத்துவதற்காகவே, தோனி மூன்று வெளிநாட்டு வீரர்களுடன் களமிறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
மேற்கூறியதைப் போலவே, வலுவான பெங்களூரு அணியின் பேட்ஸ்மேன்களை ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர் ஆகியோர் வெளியேற்றினர். சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த அந்த அணி இறுதியில் 70 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மூன்று வெளிநாட்டு வீரர்களுடன் களமிறங்கியதைப் பற்றி தோனி ஆட்டம் முடிந்தப் பிறகு தெரிவிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.