12-வது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் மும்பை அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னே காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறினார்.
இதனையடுத்து, மும்பை அணி நிர்வாகம் அவருக்கான மாற்று வீரரை தேடிவந்தது. தற்போது, வெஸ்ட் இண்டீஸ் இளம் வேகப்பந்துவீச்சாளர் அல்ஸாரி ஜோசப்-ஐ மும்பை அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது.
அல்ஸாரி ஜோசப் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 25 விக்கெட்டுகளையும், 16 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 24 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
ஸ்மித், சிம்மன்ஸ், பொல்லார்ட் மற்றும் லிவிஸ் என வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறந்த பங்களிப்பை அளித்துள்ள நிலையில் அல்ஸாரி ஜோசப் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.