ETV Bharat / sports

பார்ட்னர்ஷிப்பில் சாதனை படைத்த கோலி - டி வில்லியர்ஸ்! - கோலி - டி வில்லியர்ஸ்

மொகாலி : ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை எடுத்த இணையாக விராட் கோலி - டி வில்லியர்ஸ் ஜோடி சாதனை படைத்துள்ளது.

பார்ட்னர்ஷிப்
author img

By

Published : Apr 14, 2019, 9:18 AM IST

12ஆவது சீசனுக்கான ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி தொடர் தோல்விகளால் துவண்டு வந்த நிலையில், நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி - டி வில்லியர்ஸ் இணையின் பொறுப்பான ஆட்டத்தால் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றிபெற்றது.

இதில் பெங்களூரு அணி பேட்டிங்கின்போது தொடக்க வீரர் பார்திவ் படேல் 19 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியதையடுத்து, விராட் கோலி - டி வில்லியர்ஸ் இணை பஞ்சாப் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தது. இரண்டாவது இந்த ஜோடி 83 ரன்கள் சேர்த்திருந்தபோது, ஐபிஎல் தொடரில் அதிகபட்சமாக 2,788 ரன்கள் இணைந்து அடித்த இணை என்ற சாதனையை விராட் கோலி - டி வில்லியர்ஸ் படைத்தனர்.

இவர்களையடுத்து விராட் கோலி - கிறிஸ் கெய்ல் இணை 2,787 ரன்களுடன் இரண்டாம் இடத்திலும், வார்னர் - ஷிகர் தவான் 2,357 ரன்களுடனும், கம்பீர் - உத்தப்பா இணை 1,906 ரன்களுடன் நான்காம் இடத்திலும் உள்ளனர்.

இந்தப் பட்டியலில் விராட் கோலி - டி வில்லியர்ஸ் இணை மட்டுமே தற்போது ஒரே அணியில் ஆடிவருவது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.