ETV Bharat / sports

ராஜஸ்தானுக்கு ஸ்மித் ரிடர்ன்ஸ்; பஞ்சாப்பை சமாளிக்குமா ராஜஸ்தான்? - அஷ்வின்

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் நான்காவது லீக் ஆட்டத்தில் சொந்த மண்ணில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை ராஜஸ்தான் அணி எதிர்கொள்கிறது.

ஸ்மித்
author img

By

Published : Mar 24, 2019, 11:57 PM IST

ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஸ்மித், பட்லர், ஸ்டோக்ஸ், கெளதம், சாம் கரண், டர்னர்,சஞ்சு சாம்சன் என பேட்டிங்கில் மிகப்பெரிய தாக்குதல் ஆட்ட வீரர்களை வைத்துள்ளதால் எவ்வளவு பெரிய ஸ்கோரையும் விரட்டும் வகையில் பேட்டிங்கில் மிரட்டலாக இருக்கிறது.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தின் ஓராண்டு தடைக்கு பின்னர், ராஜஸ்தான் அணிக்கு திரும்பியுள்ளார். இதனால், ஸ்மித் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்மித் தனது பார்மை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு நிரூபிக்கும் வகையில் மிகச்சிறந்த ஆட்டத்தை நிச்சயம் வெளிப்படுத்துவார்.

மேலும், பந்துவீச்சை பொறுத்தவரையில், ஆர்ச்சர், உனத்கட், கோதி, ஸ்டோக்ஸ், கெளதம் ஆகியோர் பஞ்சாப் அணிக்கு அச்சுறுத்தல் தருவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது. அஷ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியை பொறுத்தவரையில், கெய்ல் என்னும் புயல் அனைத்து அணிகளுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் கொடுப்பார்.

கே.எல்.ராகுல், ஃபின்ச், கருண் நாயர், அகர்வால் என பேட்டிங்கிலும், அஷ்வின், ஆண்ட்ரூ டை, ஷமி, முஜிப் உர் ரஹ்மான் என வலிமையான அணியை கட்டமைத்தாலும் ஒருங்கிணைந்து ஆடுவதில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பிரச்னையை பஞ்சாப் அணி சரி செய்யுமா என்று நாளைய ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.