ETV Bharat / sports

சென்னைக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் பேட்டிங்! - சிஎஸ்கே

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில்  பந்துவீச்சை தேர்ந்தெடுத்துள்ளது.

சென்னைக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் பேட்டிங்
author img

By

Published : Apr 11, 2019, 8:05 PM IST

நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான 12ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 25ஆவது போட்டி ஜெய்ப்பூரில் தொடங்கியது. இதில், டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளார்.

சென்னை அணியில், வேகபந்துவீச்சாளர் ஸ்கோட் குஜ்லேகின், சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் ஆகியோருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் மிட்சல் சான்ட்னர் மற்றும் பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்குர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மறுமுனையில், ராஜஸ்தான் அணி பிரசாந்த் சோப்ரா, கிருஷ்ணப்பா கவுதம் மற்றும் சுதேசன் மிதுன் ஆகியோருக்கு பதிலாக சஞ்சு சாம்சன், ரியன் பராக், ஜெய்தேவ் உனாத்கட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தப் போட்டியின் மூலம் ராஜஸ்தான் வீரர் ரியன் பராக் ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளார்.

இந்தத் தொடரில் சென்னை அணியை பொறுத்த வரையில், விளையாடிய 6 போட்டிகளில் 5-ல் வெற்றி, ஒன்றில் தோல்வி என 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மறுமுனையில், ராஜஸ்தான் அணி விளையாடிய 5 போட்டிகளில் ஒன்றில் வெற்றி, 4-ல் தோல்வி என இரண்டு புள்ளிகளை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளது.

இதனால், சொந்த மைதானத்தில் இன்று சென்னையை வீழ்த்தி மீண்டும் வெற்றிபாதைக்கு திரும்ப வேண்டும் என்ற நோகத்தில் ராஜஸ்தான் அணியினர் விளையாடுவார்கள் என கூறப்படுகிறது.

சென்னை அணி விவரம்: வாட்சன், டு பிளசிஸ், ரெய்னா, தோனி(கேப்டன்), ராயுடு, கேதர் ஜாதவ், ஜடேஜா, மிட்சல் சான்ட்னர், தீபக் சஹார், இம்ரான் தாஹிர், ஷர்துல் தாக்குர்

ராஜஸ்தான் அணி விவரம்: ரஹானே(கேப்டன்), ஜாஸ் பட்லர், ஸ்டீவ் ஸ்மித், சஞ்சு சாம்சன், ராகுல் திரிபாதி, பென் ஸ்டோக்ஸ், ரியன் பராக், ஜோவ்ரே ஆர்ச்சர், ஸ்ரேயாஸ் கோபால், ஜெய்வேத் உனாத்கட், தவால் குல்கர்னி.

Intro:Body:

RRvsCSK match toss

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.