ETV Bharat / sports

ஐபிஎல் 2020: டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சு!

author img

By

Published : Sep 24, 2020, 7:02 PM IST

Updated : Sep 25, 2020, 5:59 PM IST

துபாய்: கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

RCB vs KXIP toss update
RCB vs KXIP toss uRCB vs KXIP toss updatepdate

ஐபிஎல் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாகத் தொடங்கி, நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று (செப்.24) நடைபெறும் ஆறாவது லீக் ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதற்கு முன்னதாக இவ்விரு அணிகளும் மோதிய 24 போட்டிகளில், இரு அணிகளும் தலா 12 முறை வெற்றியைப் பெற்றுள்ளன. அதனால் இன்றைய போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்ற பரபரப்பு ரசிகர்களிடம் தொற்றிக்கொண்டுள்ளது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்: கே.எல். ராகுல் (கேப்டன்), மயங்க் அகர்வால், கிளென் மேக்ஸ்வெல், கருண் நாயர், நிக்கோலஸ் பூரன், சர்ப்ராஸ் கான், ஜேம்ஸ் நீஷம் முகமது ஷமி, ஷெல்டன் கோட்ரெல், முருகன் அஸ்வின், ரவி பிஷ்னோய்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ஆரோன் ஃபிஞ்ச், விராட் கோலி(கேப்டன்), ஏபிடி வில்லியர்ஸ், தேவ்தத் படிகல், ஷிவம் தூபே, வாஷிங்டன் சுந்தர், ஜோஷ் பிலீப், டேல் ஸ்டெயின், நவ்தீப் சைனி, யுஸ்வேந்திர சஹால், உமேஷ் யாதவ்.

இதையும் படிங்க:ஐபிஎல் 2020: கேகேஆர் vs மும்பை இந்தியன்ஸ்..! ஆட்டத்தை மாற்றிய தருணங்கள்

Last Updated : Sep 25, 2020, 5:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.