ETV Bharat / sports

இம்முறையாவது மும்பையை பழி தீர்க்குமா சிஎஸ்கே? - #CSKvsMI

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இறுதி சுற்றுக்கு செல்வதற்கான முதல் தகுதிச்சுற்றில் நடப்பு சேம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் இன்று மோதுகின்றனர்.

இந்த முறையாவது மும்பையிடம் சிஎஸ்கே வெற்றிபெறுமா?
author img

By

Published : May 7, 2019, 12:15 PM IST

‘ஐபிஎல் 2019’ கோப்பை யாருக்கு என்ற கட்டத்தை நெருங்கிவந்து கொண்டிருக்கிறது. இதில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இறுதிச் சுற்றுக்கான முதல் குவாலீஃபையர் போட்டியில், ஐபிஎல் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ள இரண்டு போட்டிகள் மோதிக் கொள்ளும். இதில் எந்த அணி வெற்றி பெருகிறதோ அந்த அணி இறுதிச் சுற்றுக்கு நேரடியாக செல்லும்.

Qualifier 1 preview: CSK vs MI
ஐபிஎல் தரவரிசைப் பட்டியல்

அதன்படி 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணியும், அதே புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பலப்பரீச்சை மேற்கொள்ள இருக்கின்றன.

இந்த தொடரில் சொந்த மண்ணான சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 7 போட்டிகள் விளையாடி 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த மைதானத்தின் பிட்ச் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். இதனால் சிஎஸ்கே அணி பவுலர்களான ஹர்பஜன் சிங், தாஹீர், ஜடேஜா மும்பையை ரன்கள் எடுக்காமல் கட்டுப்படுத்தும் சூசகம் உள்ளது என்றே சொல்லலாம். பேட்ஸ்மென்கள் என்று பார்த்தால் கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா, டூ பிளெஸ்ஸிஸ், ஷேன் வாட்சன் இருந்தாலும், கேப்டன் தல தோனியின் மேஜிக் இந்த ஆட்டத்தில் இருக்குமா என்று ரசிகர்கள் எதிர்ப்பார்கின்றனர்.

இதில் ரோஹித் தலைமையிலாண மும்பை அணியில், டி காக், பாண்டியா பிரதர்ஸ், பொல்லார்ட் உள்ளிட்ட அதிரடி வீரர்கள் சிறந்த ஃபார்மில் இருப்பதால், இன்றைய போட்டி மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பவுலிங்கில் கைத்தேர்ந்தவர்களான பும்ரா, மலிங்காவின் பந்து வீச்சிற்கு சென்னை பேட்ஸ்மன்கள் பதில் சொல்வார்களா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

இதில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும். முன்னதாக மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த இரண்டு போட்டிகளிலும் சிஎஸ்கே வெற்றிகரமான தோல்வியடைந்தது குறிப்படத்தக்கது. இருப்பினும், இந்த போட்டியிலாவது சிஎஸ்கே வெற்றி பெற்று, ராஜ நடையுடன் இறுதிப் போட்டிக்கு செல்லுமா என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர் ‘எல்லோ லவ்வர்ஸ்’.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.