ராஜஸ்தான் - பெங்களூரு அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற போட்டியில், ராஜஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அப்போட்டியில் பெங்களூரு வீரர் சாஹல் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை (8 விக்கெட்டுகள்) கைப்பற்றிய வீரர் என்னும் சிறப்பை பெற்றார். இதனையடுத்து சாஹலுக்கு பர்பிள் கேப் வழங்கப்பட்டது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சாஹல், இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிள் கேப்பை கைப்பற்றியது மகிழ்வான தருணம்தான். ஆனால் அணி இன்னும் ஒரு வெற்றி கூட பெறாதது வருத்தமளிக்கிறது. இந்தநிலையில் நம்பிக்கையுடன் விளையாட வேண்டும். வரும் போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
இந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.