ETV Bharat / sports

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் பேட்டிங்! - Warner

ஹைதராபாத்: ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் பேட்டிங்!
author img

By

Published : Apr 29, 2019, 7:58 PM IST

12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. சென்னை, டெல்லி ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. மூன்றாவது, நான்காவது இடங்களை பிடிக்க ( ஹைதராபாத், மும்பை, பஞ்சாப், கொல்கத்தா) ஆகிய நான்கு அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான 47ஆவது லீக் போட்டி ஹைதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் இன்று தொடங்கியது.

இதில், டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளார். ஹைதராபாத் அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஷகிப்-உல்-ஹசன், சித்தார்த் கவுல், தீபக் ஹூடா ஆகியோருக்கு பதிலாக அபிஷேக் ஷர்மா, முகமது நபி, சந்தீப் ஷர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மறுமுனையில், பஞ்சாப் அணியும் இந்தப் போட்டியில் மூன்று மாற்றங்களோடு களமிறங்கியுள்ளது. பிரப் சிம்ரன் சிங், முஜிப்-உர்-ரஹ்மான், அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத் அணி விவரம்: வில்லியம்சன் (கேப்டன்), வார்னர், விஜய் சங்கர், மணிஷ் பாண்டே, முகமது நபி, சஹா, அபிஷேக் ஷர்மா, ரஷித் கான், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, சந்தீப் ஷர்மா

பஞ்சாப் அணி விவரம்: அஷ்வின் (கேப்டன்), கெயில், கே.எல்.ராகுல், மயாங்க் அகர்வால், நிகோலஸ் பூரான், டேவிட் மில்லர், பிரப் சிம்ரன் சிங், முருகன் அஷ்வின், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், முஜிப்-உர்-ரஹ்மான்

இந்தத் தொடரில் 11 போட்டிகளில் விளையாடி இருக்கும் இரண்டு அணிகளும் தலா 5 வெற்றி, 6 தோல்வி என 10 புள்ளிகளை பெற்றுள்ளன. ஆனால், நெட் ரன்ரேட் அடிப்படையில், ஹைதராபாத் அணி நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.