12ஆவது ஐபிஎல் தொடரின் 32ஆவது லீக் போட்டியில் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்த்து ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரஹானே பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.
பஞ்சாப் அணி எட்டுப் போட்டிகளில் விளையாடி நான்கு வெற்றி, நான்கு தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. அதேபோல் ராஜஸ்தான் அணி ஏழு போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றி, ஐந்து தோல்விகளுடன் புள்ளிப் பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கிறது.
கடந்தப் போட்டியில் இவ்விரு அணிகள் மோதியப் போட்டியில் அஸ்வின் பட்லரை மன்கட் முறையில் அவுட் செய்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் இவ்விரு வீரர்களுக்கு இடையிலான போட்டி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இன்றையப் போட்டியில் ராஜஸ்தான் அணியில் ஸ்மித்திற்கு பதிலாக டர்னர் இடம்பெற்றுள்ளார்.
அதேபோல் பஞ்சாப் அணியில் சாம் கரனுக்கு பதிலாக டேவிட் மில்லர் இடம்பெற்றுள்ளார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி விவரம் :
அஸ்வின் (கேப்டன்), கே.எல்.ராகுல், கிறிஸ் கெய்ல், மயங்க் அகர்வால், டேவிட் மில்லர், மன்தீப் சிங், நிக்கோலஸ் பூரான், முருகன் அஸ்வின், முகமது ஷமி, முஜீப் உர் ரஹ்மான், அர்ஷ்தீப் சிங்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விவரம் :
ரஹானே(கேப்டன்), ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன், ராகுல் திரிபாதி, ஆர்ச்சர், ஸ்ரேயாஸ் கோபால், குல்கர்னி, இஷ் சோதி, ஆஷ்டன் டர்னர், உனாத்கட், பின்னி.