ETV Bharat / sports

அகர்வாலை எச்சரித்த குருணல் பாண்டியா - மன்கட்

மொகாலி: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், மும்பை வீரர் குருணல் பாண்டியா மயங்க் அகர்வாலை மன்கட் முறையில் அவுட் செய்யாமல் எச்சரித்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது

அகர்வாலை எச்சரித்த குருணல் பாண்டியா
author img

By

Published : Mar 30, 2019, 11:30 PM IST

மொகாலியில் நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.இதனிடையே, மும்பை வீரர் குருணல் பாண்டியா, பஞ்சாப் வீரர் மயங்க் அகர்வாலை மன்கட் செய்ய முயற்சித்தார்.

ஆட்டத்தின் 10-வது ஓவரின் நான்காவது பந்தை வீச வந்த அவர், நான் ஸ்ட்ரைக்கில் இருந்த மயங்க் அகர்வால் கிரீஸைவிட்டு வெளியே சென்றதை கவனித்தார். இதன் பின், மன்கட் முறையில் அகர்வாலை அவுட் செய்யும் வாய்ப்பு கிடைத்தும் அவர் அதை செய்யவில்லை.

இதனால், மயங்க் அகர்வால் சுதாரித்துக்கொண்டு, கிரீஸிக்கு திரும்பினார். குருணல் பாண்டியாவின் இந்த ஸ்போர்ட்ஸ் மேன்ஷிப்பை கண்டு இணையதளத்தில் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

முன்னதாக, பஞ்சாப் வீரர் அஷ்வின் எந்தவித எச்சரிக்கையும் தராமல் ராஜஸ்தான் வீரர் பட்லரை மன்கட் முறையில் அவுட் ஆக்கியது பெரும் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.