12-வது ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. டெல்லி கேபிடல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பவுலிங்கைத் தேர்வு செய்துள்ளார்.
கொல்கத்தா அணியைப் பொறுத்தவரையில், சுனில் நரைனுக்கு பதிலாக நிதிஷ் நாயக் விளையாடுகிறார்.
டெல்லி அணியைப் பொறுத்தவரையில், கிறிஸ் மோரிஸ், விஹாரி, ஹர்ஷல் படேல், மற்றும் சந்தீ லெமிச்சானே களமிறங்கியுள்ளனர். இதனால் டெல்லி அணியின் பலம் கூடியுள்ளது. மேலும், ரஸல் விக்கெட்டை விரைவாக வீழ்த்துவோம் என கங்குலி தெரிவித்துள்ளதால் ரஸல் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
ரபாடா, மோரிஸ் என சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் கொல்கத்தா அணிக்கு அச்சுறுத்தல் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இளம் வீரர்களுடம் களமிறங்கும் டெல்லி அணியில் ப்ரித்வி ஷா, ஸ்ரேயஸ் ஐயர், தவான், ரிஷப் பந்த், மோரிஸ், இங்ரம் என இளம் வீரர்கள் கொல்கத்தா அணியின் அனுபவ பந்துவீச்சை எவ்வாறு சமாளிக்கின்றனர் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கொல்கத்தா அணி விவரம் :
தினேஷ் கார்த்திக், கிறிஸ் லின், நிதீஷ் ராணா, ரஸல், நிகில் நாயக், கில், குல்தீப் சாவ்லா, பிரஷீத் கிருஷ்ணா, ஃபெர்குசன், பியூஷ் சாவ்லா, உத்தப்பா.
டெல்லி அணி விவரம் :
ஸ்ரேய்ஸ் ஐயர், ரிஷப் பந்த், ப்ரித்வி ஷா, ஷிகர் தவான், காலின் இங்ரம், கிறிஸ் மோரிஸ், அக்ஸர் படேல், ரபாடா, சந்தீப் லெமிச்சானே, ஹர்ஷல் படேல், விஹாரி.