ETV Bharat / sports

முதலிடத்தை தக்க வைக்குமா சிஎஸ்கே! - கிங்ஸ் லெவன் பஞ்சாப்

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தனது கடைசி லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலிடத்தை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கத்தோடு களமிறங்குகிறது.

csk
author img

By

Published : May 5, 2019, 8:29 AM IST

Updated : May 5, 2019, 11:04 AM IST

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த மார்ச் 23 ஆம் தேதி தொடங்கிய லீக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகின்றன. இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ள நிலையில், மாலை நான்கு மணிக்கு தொடங்கும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.

தொடரின் முதல் போட்டியிலிருந்து சிறப்பாக ஆடிவரும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைந்து வழக்கம்போல் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது. சிஎஸ்கே இதுவரை 13 போட்டிகளில் ஆடி ஒன்பது வெற்றி, நான்கு தோல்வி என மொத்தமாக 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள டெல்லி அணியும் 18 புள்ளிகளுடன் இருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் அந்த அணி இரண்டாம் இடத்தில் உள்ளது.

மூன்றாவது இடத்தில் மும்பை அணி 16 புள்ளிகள் பெற்று பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. நான்காவதாக பிளே-ஆஃப் போட்டிக்கு யார் தகுதி பெறுவார்கள் என்ற கேள்விக்கான விடை இன்றைய லீக் ஆட்டங்களின் முடிவை பொறுத்தே தெரியவரும்.

இந்நிலையில் இன்று தனது கடைசி லீக் போட்டியில் களமிறங்கும் சென்னை அணி வெற்றியை பதிவு செய்து முதலிடத்தில் தங்களை தக்க வைத்துக்கொள்ளும் நோக்கில் களமிறங்குகின்றனர். சென்னை அணியைப் பொறுத்தவரையில் தொடக்க வீரர் ஷேன் வாட்சன் தொடர்ந்து சொதப்பி வந்தாலும் அவர் மீதுள்ள நம்பிக்கையால் அணி நிர்வாகம் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பளித்துவருகிறது.

தொடரின் சில போட்டிகளுக்கு பின் தமிழ்நாடு தொடக்க வீரர் முரளி விஜய்க்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துபோது வாட்சன் திடீரென சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 96 ரன்கள் விளாசி தான் இருப்பதை அனைவருக்கும் உணர்த்தினார்.

எனினும் அவர் அடுத்தடுத்த போட்டிகளில் மீண்டும் தனது சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார். எனவே இன்றையப் போட்டியில் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டு முரளி விஜய் அணியில் சேர்க்கப்பட அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

csk
தாஹிர் ஜடேஜா ஹர்பஜன்

அதே நேரத்தில் டு ப்ளஸிஸ், ரெய்னா, ராயுடு ஆகியோர் பெரிய அளவில் அடிக்காவிட்டாலும் ஏதோ ஓரளவுக்கு பெர்ஃபார்மென்ஸ் செய்து வருகிறார்கள். பின் வரிசையில் ஜாதவ் உள்ளார். தோனி, பிராவோ, ஜடேஜா என அனைவரும் அல்டிமேட் ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர். குறிப்பாக கேப்டன் தோனி கடைசி 5 ஓவர்களில் சிக்சர் இயந்திரமாகவே மாறி விடுகிறார்.

பந்துவீச்சைப் பொறுத்தவரை சென்னை அணி பெரும்பாலும் சுழற்பந்து வீச்சாளர்களை நம்பியே களமிறங்குகிறது. அதற்கேற்றார் போல் தாஹிர், ஹர்பஜன், ஜடேஜா என்ற மும்மூர்த்திகளும் தங்களது சுழற்பந்துவீச்சால் எதிரணியைக் கலங்கடித்து விடுகின்றனர். தீபக் சாஹர் முற்பகுதியிலும் பிராவோ பிற்பகுதியிலும் தங்களது பங்களிப்பை அளிக்கின்றனர்.

பஞ்சாப் அணி 13 போட்டிகளில் ஆடி ஐந்து வெற்றி எட்டு தோல்வி என 10 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணியின் இன்றையப் போட்டியில் சென்னை அணியை மிகப்பெரிய அளவில் வீழ்த்தினால் மட்டுமே பிளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைய முடியும் என்ற கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளது. அது தவிர கொல்கத்தா அணியும் மும்பையிடம் அடி வாங்கினால் மட்டுமே பஞ்சாபை பிளே-ஆஃப்பில் பார்க்கலாம்.

கடைசியாக கொல்கத்தா அணியிடம் தோல்வியைத் தழுவினாலும், பஞ்சாப் அணி ஆடிய அனைத்து போட்டிகளிலும் நல்ல ஸ்கோரையே பெற்றுள்ளது. பஞ்சாப் தொடக்க வீரர்கள் கெயில், கே.எல்.ராகுல் ஆகியோர் நல்ல ஸ்கோரை அடித்து அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்தாலும் பந்துவீச்சில் சொதப்புவதே தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

csk
கெய்ல் கேஎல்ராகுல்

பெரும்பாலும் ஐபிஎல் தொடரின் சென்னை அணி தனது இறுதி லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியையே சந்தித்துள்ளது. இன்றையப் போட்டியில் சென்னை அணி முதலிடத்தை தக்க வைக்குமா அல்லது தோனியின் கீழ் விளையாடிய அனுபவமுள்ள பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் தனது குருவை வீழ்த்தி பஞ்சாப் அணியை பிளே-ஆஃப் சுற்றுக்குள் அழைத்துச் செல்வாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Intro:Body:

sports 2

Conclusion:
Last Updated : May 5, 2019, 11:04 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.