இன்றைய ஐபிஎல் போட்டிகளில் பெங்களூரு - ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான்அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதுவரைஇரு அணிகளும் இந்த தொடரில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளதால்,எந்த அணி முதல் வெற்றியை பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் அணி இந்த தொடரில் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கேப்டன் கோலி உள்ளிட்ட அனைத்து பேட்ஸ்மேன்களும் ரன்கள் குவிக்கதவறுகின்றனர். கடந்தப் போட்டியில் பெங்களூரு அணியின் பந்துவீச்சை ஹைதராபாத் அணி வெளுத்து வாங்கி 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
அதேபோல் ராஜஸ்தான் அணியை பொறுத்தவரையில், ரஹானே, சஞ்சு சாம்சன், பட்லர் ஆகியோரை நம்பியே பேட்டிங் வரிசை உள்ளதால் நடுவரிசை வீரர்கள் ரன்கள் எடுக்க முயற்சிக்க வேண்டும். மேலும் தடைக்கு பின்னர் திரும்பி வந்துள்ள ஸ்மித் தன்னை நிரூபிப்பார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணியில் காயம் காரணமாக விலகியுள்ள சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ஸ்டூவர்ட் பின்னியும், உனாட்கதிற்கு பதிலாக வருண் ஆரோன் ஆகியோர்களமிறக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் பெங்களூரு அணியில் சிவன் துபே-வுக்குபதிலாக அக்ஷத்தீப் நாத், பர்மன்-க்கு பதிலாக நவ்தீப் சைனி, கிராண்ட்ஹோமிற்கு பதிலாக ஸ்டோனிஸ் களமிறக்கப்பட்டுள்ளார்.
பெங்களூரு அணி விவரம் :
விராட் கோலி(கேப்டன்), டி வில்லியர்ஸ், ஹெட்மயர், பார்த்திவ் படேல், மொலியின் அலி, சிராஜ், சாஹல், நவ்தீப் சைனி, ஸ்டோனிஸ், உமேஷ் யாதவ். அக்ஷதீப் நாத்.
ராஜஸ்தான் அணி விவரம் :
ரஹானே (கேப்டன்), ஜோஸ் பட்லர், ஸ்டீவ் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், ராகுல் திரிபாதி, ஆர்ச்சர், குல்கர்னி, கெளதம், ஸ்ரேயஸ் கோபால், ஸ்டூவர்ட் பின்னி, வருண் ஆரோன்.