ETV Bharat / sports

டெல்லி அணிக்கு எதிராக பேட்டிங்; முதல் வெற்றியைப் பெறுமா பெங்களூரு?

பெங்களூரு: பெங்களூரு அணிக்கு எதிரானப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

டெல்லி
author img

By

Published : Apr 7, 2019, 4:04 PM IST

இன்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதுகிறது. இந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி இதுவரை ஒரு வெற்றியைக் கூட பெறாத நிலையில், இன்றைய ஆட்டத்திலாவது தன் முதல் வெற்றியை அந்த அணி பெறுமா என்கிற எதிர்பார்ப்பு அதன் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. அதேபோல் டெல்லி அணி, ஐந்து போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றி, மூன்றில் தோல்வியுடன் களத்தில் உள்ளது.

இந்நிலையில், இன்றைய ஆட்டத்திற்கான டாஸ்-ஐ வென்ற டெல்லி கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர், பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். மேலும், இந்த போட்டியில் இரு அணிகளும் கடந்த போட்டியில் ஆடிய அதே அணியுடன் களமிறங்கியுள்ளது. நெகிழி(Plastic) மறுசுழற்சி குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் பச்சை நிற ஜெர்சியுடன் பெங்களூரு வீரர்கள் களமிறங்கியுள்ளதால், இன்றைய போட்டி ரசிகர்களிடையே கூடுதல் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.

RCB vs DC
டெல்லி அணி

டெல்லி அணி விவரம்:

ஸ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), ஷிகர் தவான், ப்ரித்வி ஷா, ரிஷப் பந்த், ராகுல் டிவாட்டியா, கிறிஸ் மோரிஸ், அக்ஸர் படேல், சந்தீப் லெமிச்சானே, ரபாடா, காலின் இங்ரம், இஷாந்த் ஷர்மா.

RCB vs DC
பெங்களூரு அணி

பெங்களூரு அணி விவரம்:

விராட் கோலி (கேப்டன்), பார்த்திவ் படேல், டி வில்லியர்ஸ், மொயின் அலி, பவன் நெகி, டிம் செளதி, சாஹல், ஸ்டோனிஸ், நவ்தீப் சைனி, சிராஜ், அஷ்தீப் நாத்.

Intro:Body:

news

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.