ETV Bharat / sports

பொல்லார்ட் அதிரடி; ஹைதராபாத் பந்துவீச்சுக்கு பணிந்த மும்பை!

ஹைதராபாத் : மும்பை அணிக்கு அணிக்கு எதிரானப் போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றிபெற 137 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

பொல்லார்ட்பொல்லார்ட்
author img

By

Published : Apr 6, 2019, 9:55 PM IST

இன்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் - மும்பை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் புவனேஷ்வர் குமார், பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

பின்னர் மும்பை அணிக்காக கேப்டன் ரோஹித் ஷர்மா - டி காக் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கியது. முதல் ஓவரிலேயே ரோஹித் ஷர்மா கொடுத்த கேட்ச் வாய்ப்பை கவுல் தவறவிட்டார். பின்னர் 3-வது ஓவரின் போது, 11 ரன்களில் முகமது நபி பந்தில் ஆட்டமிழந்து வெளியேற, அவரைத் தொடர்ந்து நல்ல ஃபார்மில் இருந்த சூர்யகுமார் யாதவ் 7 ரன்களில் வெளியேறி அதிர்ச்சியளித்தார்.

பின்னர் டி காக்-இஷான் கிஷன் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடர்ந்து, 19 ரன்களில் டி காக் நடையைக் கட்ட, ஆட்டம் ஹைதராபாத் அணியின் கைகளுக்கு சென்றது. பின்னர் குருணால் பாண்டியா 6 ரன்களில் ஆட்டமிழக்க, 17 ரன்கள் அடித்திருந்த இஷான் கிஷன் துரிதஷ்டவசமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

MI vs SRH
ஹைதராபாத் அணி

15 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 75 ரன்கள் எடுத்து பரிதாபமான நிலையில் இருந்தது. கடந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா-பொல்லார்ட் இணை சிறிது நேரம் தாக்குப் பிடித்தது. பின்னர் ஹர்திக் பாண்டியா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த, 14 ரன்களில் ரஷீத் கான் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து வந்த ராகுல் சாஹர் 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.

MI vs SRH
பொல்லார்ட்

18 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 97 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. பின்னர் 19-வது ஓவரில் பொல்லார்ட் அதிரடியாக மூன்று சிக்ஸர்களை பறக்கவிட்டு மும்பை அணியின் ஸ்கோரை உயர்த்தினார். கடைசி ஓவரில் பொல்லார்ட் அதிரடியில் 19 ரன்களை எடுத்த மும்பை அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் எடுத்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் பொல்லார்ட் 26 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். ஹைதராபாத் அணியில் கவுல் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Intro:Body:

SPORTS

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.