ETV Bharat / sports

கொல்கத்தாவை புரட்டி எடுத்த பெயர்ஸ்டோவ்; ஹைதராபாத் அபார வெற்றி! - வார்னர்

ஹைதராபாத்: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

KKR Vs SRH
author img

By

Published : Apr 21, 2019, 7:42 PM IST

இன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 38ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா - ஹைதராபாத் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் வில்லியம்சன் கொல்கத்தாவை பேட்டிங் ஆடப் பணித்தார். பின்னர் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி எட்டு விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு, தொடக்க வீரர்களாக வார்னர் - பெயர்ஸ்டோவ் களமிறங்கினர். தொடக்கத்தில் பெயர்ஸ்டோவ் கொடுத்த கேட்ச் வாய்ப்பை கரியப்பா தவறவிட, பின்னர் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டது இவ்விணை.

ஒவ்வொரு ஓவர்களிலும் ஒரு பவுண்டரி அடித்து ரன் ரேட்டை சரியான விகிதத்தில் கொண்டுச் சென்ற இந்த இணை பவர்- ப்ளேயில் விக்கெட் இழப்பின்றி 72 ரன்களை அபாரமாக சேர்த்தது. இதன்மூலம் இந்தப் தொடரின் பவர்-ப்ளே ஓவர்களில் அதிக ரன்களை எடுத்த அணி என்ற பெருமையை ஹைதராபாத் பெற்றது. மேலும் கரியப்பா வீசிய ஆறாவது ஓவரில் 20 ரன்களை இருவரும் சேர்த்தனர்.

பெயர்ஸ்டோவ்
வார்னர்

தொடர்ந்து இந்த இணை கொல்கத்தா பந்துவீச்சாளர்களுக்கு எவ்வித வாய்ப்புகளையும் வழங்காமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஹைதராபாத் அணி 11 ஓவர்களில் 114 ரன்களை எடுத்து அட்டகாசமாக விளையாடியது. இதனையடுத்து இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடந்து அதிரடியாக ஆடினர்.

வார்னர் 38 பந்துகளில் 67 ரன்கள் சேர்த்த நிலையில், பிரித்விராஜ் பந்தில் போல்டாகி வெளியேறினார். இதனையடுத்து கேப்டன் வில்லியம்சன் களமிறங்கி ஒருமுனையில் நிதானமாக ஆட, அதிரடியாக ஆடிய பெயர்ஸ்டோவ் 15ஆவது ஓவரின் கடைசி பந்தில் சிக்சர் அடித்து ஹைதராபாத் அணியை வெற்றிபெறச் செய்தார்.

பெயர்ஸ்டோவ்
பெயர்ஸ்டோவ்

ஹைதராபாத் அணி 15 ஓவர்களில் 161 ரன்கள் எடுத்து கொல்கத்தாவை ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இறுதிவரை ஆட்டமிழக்காத பெயர்ஸ்டோவ் 43 பந்துகளில் நான்கு சிக்சர்கள், ஏழு பவுண்டரிகள் உட்பட 80 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் நான்காம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.