சென்னை அணியின் வீரர்கள் எப்போதும் தோனியின் 'கேப்டன் கூல் மோடு'லேயே இருந்துவருகின்றனர். புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் கெத்தாக இருக்கும் சென்னை அணி வீரர்கள் ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியதை கொண்டாடும் விதமாக கல்லி-ராப் பாடல் ஒன்றை சென்னை அணி வீரர்கள் பாடி இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
'எங்க கல்லி கிரிக்கெட்டுக்கு பெரிய விசில் அடிங்க' எனத் தொடங்கும் பாடலின் தொடக்கத்தில் சென்னைத் தமிழ் பேச சென்னை வீரர்கள் அனைவரும் கஷ்டப்படுகிறார்கள். சிறிது நேரம் பின்னர், சிங்காரச் சென்னையின் அழகிய தமிழை அழகாகப் பாடி கெத்து காட்டுகின்றனர்.
-
From Dosa Kings to Silambattam pros to now the Dapper Rappers! Watch Namma Lions strike high with the Super Gully Rap Song! #WhistlePodu #Yellove🦁💛 pic.twitter.com/SVgiGKtbAb
— Chennai Super Kings (@ChennaiIPL) May 4, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">From Dosa Kings to Silambattam pros to now the Dapper Rappers! Watch Namma Lions strike high with the Super Gully Rap Song! #WhistlePodu #Yellove🦁💛 pic.twitter.com/SVgiGKtbAb
— Chennai Super Kings (@ChennaiIPL) May 4, 2019From Dosa Kings to Silambattam pros to now the Dapper Rappers! Watch Namma Lions strike high with the Super Gully Rap Song! #WhistlePodu #Yellove🦁💛 pic.twitter.com/SVgiGKtbAb
— Chennai Super Kings (@ChennaiIPL) May 4, 2019
ரசிகர்கள் ஒருமுறை அந்தப் பாடலைப் பார்த்தால் புரியும்... க்யூட் ரெய்னா, கெத்து ஜடேஜா, பராசக்தி எக்ஸ்பிரஸ் தாஹிர், தமிழ்ப் புலவர் ஹர்பஜன் சிங் என அனைவரும் தமிழில் பாடி பட்டையை கிளப்பியுள்ளனர். சென்னை அணி வீரர்கள் பாடியுள்ள இந்தப் பாடல் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
எங்க சென்னை சூப்பர் கிங்ஸுக்கு பெரிய விசில் அடிங்க...!