ETV Bharat / sports

IPL 2019, RRvKXIP: போங்காடிய அஷ்வின்; பஞ்சாப் அணி வெற்றி - ஜாஸ் பட்லர்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போங்காடிய அஷ்வின்; பஞ்சாப் அணி வெற்றி
author img

By

Published : Mar 25, 2019, 11:55 PM IST

Updated : Mar 26, 2019, 12:09 AM IST

2019ஆம் ஆண்டுக்கான ஐபில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து, இதைத்தொடர்ந்து, ஜெய்ப்பூரில் நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரஹானே முதலில் பந்துவீச தீர்மானித்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி கிறிஸ் கெயிலின் அதிரடியான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 184 ரன்களை குவித்தது. இதைத்தொடர்ந்து 185 ரன் இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் அணியில் ஜாஸ் பட்லர், ரஹானே ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 78 ரன்களை சேர்த்த நிலையில், ரஹானே அஷ்வினின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இருப்பினும், ஜாஸ் பட்லர் தொடர்ந்து 360 டிகிரி கோணத்திலும் ஷாட்டுகளை ஆடி மிரட்டினார்.இதனால், ராஜஸ்தான் அணி வெற்றிபெற்றுவிடும் என்ற நம்பிக்கையில் அந்த அணி ரசிகர்கள் இருந்தனர்.

இதனிடையே, ஜாஸ் பட்லரை எப்படி அவுட் செய்வதென்று தெரியாமல் இருந்த பஞ்சாப் அணி அவரை சர்ச்சைக்குரிய விதத்தில் அவுட் செய்தது.ஆட்டத்தின் 13வது ஓவரின் கடைசி பந்தை வீச வந்த அஷ்வின், நான் ஸ்ட்ரைக்கில் இருந்த பட்லர் க்ரீஸில் இருந்த வெளியேறவுடன் பந்தை வீசாமல், அருகில் இருந்த ஸ்டெம்பை அடித்தார். இதனால், பட்லர் - அஷ்வின் இருவருக்கும் கருத்து வேறுபாடு உண்டாகியது. இறுதியில் பட்லர் கிரிக்கெட் விதிப்படி ரன் அவுட் என்று அறிவிக்கப்பட்டது.

43 பந்துகளில் 10 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 69 ரன்களை விளாசினார். பட்லர் ஆட்டமிழந்தப்பின் ஆட்டம் மொத்தம் தலைகீழாக மாறியது. பின்னர் களமிறங்கிய, ஸ்டீவ் ஸ்மித்(20), பென் ஸ்டோக்ஸ்(6), ராகுல் திரிபாதி (1),கிருஷ்ணப்பா கவுதம் (3), அர்ச்சர் (2) என சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியில் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது.

Intro:Body:Conclusion:
Last Updated : Mar 26, 2019, 12:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.